டி.வி.எஸ். என்டார்க் 125 XT மாடலில் சமூக வலைதள நோட்டிபிகேஷன் அலெர்ட்கள், ஆன்லைன் உணவு டெலிவரி விவரங்களை டிராக் செய்யும் வசதி உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது பிரபல 125சிசி ஸ்கூட்டர் மாடலின் புது வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டி.வி.எஸ். என்டார்க் 125 XT விலை ரூ. 1,02,823 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஸ்மார்ட் அம்சங்கள்:
புதிய டி.வி.எஸ். என்டார்க் XT மாடலில் ஹைப்ரிட் SmartXonnect சிஸ்டம், TFT மற்றும் LCD கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் 60 ஹை-டெக் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் டி.வி.எஸ். இன்டெலிகோ தொழில்நுட்பம், சைலண்ட், ஸ்மூத் மற்றும் சிறப்பான ஸ்டார்ட்-ஸ்டாப் ஃபன்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்கூட்டரில் ஸ்போர்ட் அலாய் வீல்கள் உள்ளன. இவை ஸ்கூட்டரில் அதிக மைலேஜ் வழங்கும். டி.வி.எஸ். என்டார்க் 125 XT மாடலில் சமூக வலைதள நோட்டிபிகேஷன் அலெர்ட்கள், ஆன்லைன் உணவு டெலிவரி விவரங்களை டிராக் செய்யும் வசதி உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது.
என்ஜின் விரங்கள்:
இந்த ஸ்கூட்டரில் உள்ள டிராபிக் டைம் ஸ்லைடர் ஸ்கிரீன்களை கொண்டு கிரிகெட் மற்றும் கால்பந்து ஸ்கோர், செய்திகள் மற்றும் பல்வேறு விவரங்களை போக்குவரத்து நெரிசல் அல்லது சிக்னலில் நிற்கும் போது பார்த்து தெரிந்து கொள்ள முடியும். டி.வி.எஸ். என்டார்க் 125 XT மாடலில் 124.8 சிசி, சிங்கில் சிலிண்டர், 3 வால்வு, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9.25 பி.ஹெச்.பி. பவர், 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இதர அம்சங்கள்:
இதில் உள்ள SmartXtalk அம்சம் வாய்ஸ் அசிஸ்ட் வசதியை வழங்குகிறது. இதை கொண்டு ஸ்கூட்டர் மோட், ஸ்கிரீன் பிரைட்னஸ், நேவிகேஷன், பாடல்களை மாற்றுவது போன்ற அம்சங்களை குரல் வழியே மேற்கொள்ள முடியும். இத்துடன் எரிபொருள் குறைவது, வீணாவது, மழை எச்சரிக்கை, போன் பேட்டரி குறைவது போன்ற தகவல்களை வழங்குகிறது.
"டி.வி.எஸ். என்டார்க் 125 மாடல் அதன் தனித்துவம் மிக்க அம்சங்கள், ஸ்டைல், பெர்பார்மன்ஸ் மற்றும் தொழில்நுட்பம் என மூன்று விஷயங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் நம்பத் தகுந்த 125சிசி ஸ்போர்ட் மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இந்தியா மட்டும் இன்றி வெளிநாட்டு சந்தைகளிலும் டி.வி.எஸ். என்டார்க் 125 மமாடல் வெற்றிக் கதையை தொடர்கிறது. இந்த வரிசையில் தற்போது டி.வி.எஸ். என்டார்க் 125 XT மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம்," என டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் கம்யூட்டர், கார்ப்பரேட் பிராண்டு மற்றும் டீலர் டிரான்ஸ்பர்மேஷன் பிரிவு மூத்து துணை தலைவர் அனிருத்தா ஹால்டர் தெரிவித்து இருக்கிறார்.