எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம்... இந்தியாவில் ரூ. 4800 கோடி முதலீடு.. டொயோட்டா அதிரடி..!

By Kevin Kaarki  |  First Published May 8, 2022, 4:13 PM IST

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் நிறுவனங்கள் மட்டும் இணைந்து ரூ. 4 ஆயிரத்து 100 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.


டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார், டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் மற்றும் டொயோட்டா இண்டஸ்ட்ரீஸ் என்ஜின்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களை உள்ளடக்கிய டொயோட்டா குழும நிறுவனங்கள் கர்நாடக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி டொயோட்டா குழும நிறுவனங்கள் இந்தியாவில் ரூ. 4 ஆயிரத்து 800 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. 

இதில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் ஆட்டோ பார்ட்ஸ் நிறுவனங்கள் மட்டும் இணைந்து ரூ. 4 ஆயிரத்து 100 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் களமிறங்கி 25 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Tap to resize

Latest Videos

வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு:

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது மட்டும் இன்றி, இந்த முதலீட்டின் மூலம் வேலை வாய்ப்பு உருவாக்க முடியும். புரிந்துணர்வு ஒப்பந்தம் கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன துணை தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது. 

ஒப்பந்தத்தின் படி டொயோட்டா குழும நிறுவனங்கள் உற்பத்தி ஆலைகளை கட்டமைத்து, இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும். இந்த முதலீடு தற்போது அதிக காற்று மாசை ஏற்படுத்தும் எரிபொருள்களை அதிகம் சாராமல் இருக்க செய்யும் மாற்று எரிபொருள் சார்ந்த புது தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட இருக்கிறது. இத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான பணிகளும் இந்த முதலீட்டில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு:

டொயோட்டா நிறுவனத்தின் சுற்றுச் சூழல் சவால் 2050 படி, டொயோட்டா நிறுவனம் காற்று மாசை குறைப்பதற்கான வழிமுறைகளை சரியாக பின்பற்றி பவ்வேறு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்த இருக்கிறது. இதன் மூலம் 2050 வாக்கில் காற்று மாசு அளவுகளை வெகுவாக குறைக்க செய்ய டொயோட்டா முடிவு செய்துள்ளது. 

“எங்களது தத்துவத்தின் படி, நாங்கள் எப்போதும் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு, பல்வேறு தொழில்நுட்ப பாதைகளில் பயணம் செய்து, மாசு ஏற்படுத்தும் எரிபொருளை அதிகம் சாராமல் இருக்கச் செய்யும் தேசிய இலக்குகளை அடைகிறோம். இவ்வாறு செய்யும் போது காற்று மாசு அளவை குறைப்பதோடு, புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும். டொயோட்டா இயங்கி வரும் நாடு மற்றும் அதன் குடிமக்களுக்கு சிறப்பான சேவையை வழங்க வேண்டும் என்பதில் டொயோட்டா உறுதியாக இருக்கிறது,” என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணை தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் தெரிவித்தார். 

click me!