இந்திய விற்பனையில் புது மைல்கல்.. மாஸ் காட்டிய டொயோட்டா.. அதற்குள் இத்தனை யூனிட்களா?

By Kevin Kaarki  |  First Published Apr 30, 2022, 4:13 PM IST

யூனிட் கேரளா மாநிலத்தின் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள நிப்பான் டொயோட்டா விற்பனை மையத்தில் வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.


ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தியாளரான டொயோட்டா இந்திய சந்தை விற்பனையில் புது மைல்கல் எட்டியது. அதன்படி டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் 20 லட்சம் கார்களை விற்பனை செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட 20 லட்சமாவது யூனிட் டொயோட்டா கிளான்சா ஹேச்பேக் மாடல் ஆகும். இந்த யூனிட் கேரளா மாநிலத்தின் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள நிப்பான் டொயோட்டா விற்பனை மையத்தில் வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விலை உயர்வு:

Latest Videos

undefined

புது மைல்கல் தவிர டொயோட்டா நிறுவனம் நாளை முதல் தனது கிளான்சா மற்றும் அர்பன் குரூயிசர் கார் மாடல்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்து உள்ளது. இதுபற்றிய  அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து வருவதை ஈடு செய்யும் முயற்சியாக கார் மாடல்கள் விலை உயர்த்தப்படுவதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்து உள்ளது. இம்முறை கார்களின் விலை இரண்டு சதவீதம் வரை உயர்த்தப்பட இருக்கிறது. 


 
புது மைல்கல்:

"போக்குவரத்து தேவைகளுக்கு 20 லட்சம் பேர் டொயோட்டா பிராண்டை தேர்வு செய்து இருப்பது எங்களுக்கு பூரிப்பாக உள்ளது. 20 லட்சம் வாடிக்கையாளர்கள் எனும் பயணத்தில் நாங்கள் நீண்ட தூரம்  கடந்து வந்து இருக்கிறோம். கடந்த இரண்டு தசாப்தங்களாக, டொயோட்டா நிறுவனம் தலைச்சிறந்த தரம், டியுரபிலிட்டி மற்றும் ரிலையபிலிட்டி உள்ளிட்டவற்றை வழங்குவதில் உறுதியான அடித்தளம் அமைத்து இருக்கிறோம். 2022 மற்றும் அதன் பின் வரும் ஆண்டுகளில் மேலும் அதிக பிரிவுகளில், புதிய சந்தைகளில் களமிறங்குவோம் என நம்பிக்கை வைத்து இருக்கிறோம். இது அனைவருக்கும் மகிழ்ச்சியை வழங்க வேண்டும் என்ற எங்களின் குறிக்கோளை அடைய உதவும்," என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவர் அடுல் சூட் தெரிவித்தார். 

"மாறி வரும் காலக்கட்டத்திற்கு ஏற்ப, டொயோட்டா பொருட்கள் மற்றும் சேவைகளை இதுவரை இல்லாத வகையில் மிக எளிமையாக இயக்கும் வகையில் பல்வேறு புதுமைகளை மேற்கொண்டு இருக்கிறோம். விர்ச்சுவல் ஷோரூம்கள், நீட்டிக்கப்பட்ட விற்பனை மையங்கள் உள்ளிட்டவை, எங்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறது. தொடர்ந்து சிறந்த முறையில் ஆதரவை வழங்கி வரும் வினியோகஸ்தர்கள், டீலர் பார்ட்னர் மற்றும் எங்களின் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். எங்களது வாடிக்கையாளர்களின் ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து தலைசிறந்த அனுபவத்தை வழங்க பணியாற்றுவோம்," என அவர் மேலும் தெரிவித்தார். 

click me!