437 கி.மீ. ரேன்ஜ்... டாடா நெக்சான் EV மேக்ஸ் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published May 11, 2022, 3:26 PM IST

அதிக திறன் கொண்ட பேட்டரி மட்டும் இன்றி டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் ஏராளமான் அப்டேட்கள் செய்யப்பட்டு உள்ளது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் நீண்ட ரேன்ஜ் வழங்கும் நெக்சான் EV மேக்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 74 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 24 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 40.5 கோலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 437-க்கும் அதிக கிலோமீட்டர்கள் வரை செல்லும். அதிக திறன் கொண்ட பேட்டரி மட்டும் இன்றி டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் ஏராளமான் அப்டேட்கள் செய்யப்பட்டு உள்ளது. மாற்றங்கள் முன்புற கேபின் பகுதியில் இருந்தே துவங்குகிறது. அதன்படி செண்டர் கன்சோலில் அதிக பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

Latest Videos

undefined

இந்திய சந்தையில் டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் XZ+ மற்றும் ZX+ லக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் இண்டென்சி டீல், டேடோனா கிரே மற்றும் ப்ரிஸ்டைன் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் டூயல் டோன் ஸ்டாண்டர்டு அம்சமாக உள்ளது. மேலும் இண்டென்சி டீல் நிறம் நெக்சான் EV மேக்ஸ் மாடலுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. 

விலை விவரங்கள்

டாடா நெக்சான் EV மேக்ஸ் XZ+ 3.3 கிலோவாட் சார்ஜர் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 74 ஆயிரம்

டாடா நெக்சான் EV மேக்ஸ் XZ+ 7.2 கிலோவாட் AC பாஸ்ட் சார்ஜர் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 24 ஆயிரம்

டாடா நெக்சான் EV மேக்ஸ் XZ+ லக்ஸ் 3.3 கிலோவாட் சார்ஜர் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 74 ஆயிரம்

டாடா நெக்சான் EV மேக்ஸ் XZ+ லக்ஸ் 7.2 கிலோவாட் AC பாஸ்ட் சார்ஜர் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 24 ஆயிரம்

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

டிசைன்:

தோற்றத்தில் புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் முந்தைய நெக்சான் EV போன்றே காட்சி அளிக்கிறது. எனினும், இந்த மாடலில் மேக்ஸ் எனும் பேட்ஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய நெக்சான் EV மேக்ஸ் அதன் ஸ்டாண்டர்டு மாடலுடன் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் செண்டர் கன்சோல் பகுதியில் புதிய ரோட்டரி டையல் மற்றும் டிஸ்ப்ளே யூனிட் உள்ளது. இதை கொண்டு காரின் மோட் மற்றும் இதர விவரங்களை பார்க்க முடியும். 

இத்துடன் ஆக்டிவ் மோட் டிஸ்ப்ளே அருகில் ஜூவல் நாப் ஒன்று உள்ளது. இத்துடன் மக்கரானா பெய்க் இண்டீரியர், லெதர் இருக்கைகள், முன்புற பயணிகளுக்கு வெண்டிலேஷன், ஏர் பியூரிபையர், வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோ டிம்மிங் IRVM மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

டிரைவிங் மோட்கள்:

டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல்- இகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்று வித டிரைவிங் மோட்கள், எட்டு புது அம்சமங்கள் கொண்டிருக்கிறது. இதன் Z கனெக்ட் செயலி 48 கனெக்டெட் கார் அம்சங்களை வழங்குகிறது. இதை கொண்டு காரின் அம்சங்கள் மற்றும் விவரங்களை மேலும் அதிகமாக தெரிந்து கொள்ள முடியும். இத்துடன் ஸ்மார்ட்வாட்ச் இண்டகிரேஷன், ஆட்டோ / மேனுவல் DTC செக், மாதாந்திர வாகன அறிக்கை, மேம்பட்ட டிரைவ் அனாலிடிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

ரேன்ஜ்:

புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் உள்ள 40.5 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக், முந்தைய நெக்சான் EV மாடலில் உள்ளதை விட 33 சதவீதம் அதிகம் ஆகும். இதன் காரணமாக புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. செயல்திறனை பொருத்தவரை இந்த கார் 141 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளுக்குள் எட்டிவிடும். இது முந்தைய நெக்சான் EV மாடலை விட 100 கிலோ எடை அதிகம் ஆகும். புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடலுடன் 3.3 கிலோவாட் அல்லது 7.2 கிலோவாட் AC பாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

click me!