300 கி.மீ. ரேன்ஜ்.. நெக்சான் EV மேக்ஸ் டீசர் வெளியீடு... டாடா மோட்டார்ஸ் அதிரடி!

By Kevin Kaarki  |  First Published May 9, 2022, 3:48 PM IST

டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலுக்கான புதிய டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய டீசரின் படி டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

டீசரின் படி டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் மும்பையில் இருந்து பூனேவிற்கு, பெங்களூருவில் இருந்து மைசூருவிற்கும், டெல்லி மற்றும் குருக்‌ஷேத்திரா, சென்னை மற்றும் புதுச்சேரி போன்ற வழித்தடங்களில் சிங்கில் சார்ஜ் செய்தே பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Latest Videos

undefined

பாஸ்ட் சார்ஜிங்:

புதிய நெக்சான் EV மேக்ஸ்  மாடலில் 40 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6.6 கிலோவாட் ஏ.சி. சார்ஜப் வழங்கப்படுகிறது. இது காரை அதிவேகமாக சார்ஜ் செய்யும் திறன் வழங்குகிறது. புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடலை சாதாரண நெக்சான் EV மாடலுடன் வித்தியாசப்படுத்தி காண்பிக்க ஏதுவாக 5 ஸ்போக் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது.

காரின் உள்புறம் இலிமினேட் செய்யப்பட்ட கியர் செலக்டர் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய பேட்டரி பேக் முந்தைய மாடலில் உள்ள பேட்டரி பேக்-ஐ விட 80 முதல் 100 கிலோ வரை அதிக எடை கொண்டிருக்கும். ஸ்டாண்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது நெக்சான் EV மேக்ஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.  

பேட்டரி விவரங்கள்:

தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் டாடா நெக்சான் EV மாடல் 30.2 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 3 பேஸ் பெர்மணன்ட் மேக்னட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 127.23 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

டாடா நெக்சான் EV மாடல் விலை ரூ. 14 லட்சத்து 79 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 17 லட்சத்து 40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் புதிய நெக்சான் EV மேக்ஸ் விலை இதை விட சற்று அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய தகவல்களின் படி புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலின் விலை ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ரூ. 2 லட்சம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

click me!