டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டாடா ஏஸ் EV மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 17 ஆண்டுகளுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த டாடா ஏஸ் மாடல்களை தற்போது பெருமளவு அப்டேட் செய்து இருக்கிறது. சிறிய வர்த்தக வாகனமான டாடா ஏஸ் மாடல் தற்போது எலெக்ட்ரிக் வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டாடா ஏஸ் வாகனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மாடல் ஆகும். இது சந்தையில் 70 சதவீத பங்குகளை பெற்று அசத்தி வருகிறது.
எரிபொருள் சிஸ்டம்:
இதுவரை இந்த மாடல் பெட்ரோல், டீசல் மற்றும் CNG வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் டாடா ஏஸ் தற்போது அனைத்து விதமான எரிபொருள்களிலும் இயங்கும் மாடலாக மாறி இருக்கிறது. தற்போதைய டாடா ஏஸ் மாடல்களின் விலை ரூ. 4 லட்சத்தில் துவங்குகின்றன. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் வரை நிர்ணம் செய்யப்பட்டு உள்ளன.
Get ready to experience the technology of tomorrow. Presenting the all new Ace EV. pic.twitter.com/ZFN1rzSTu5
— Tata Motors (@TataMotors)விலை விவரங்கள்:
புதிய டாடா ஏஸ் எலெக்ட்ரிக் மாடல் விலை ரூ. 6 லட்சத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ. 7 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் என தெரிகிறது. டாடா ஏஸ் EV மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் EVOGEN பவர்டிரெயினில் கிடைக்கும் முதல் மாடல் ஆகும். இந்த வாகனம் முழு சார்ஜ் செய்தால் 154 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்குகிறது. இதில் 21.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
இது 36 ஹெச்.பி. பவர், 130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. டாடா ஏஸ் EV மாடலுடன் மேம்பட்ட பேட்டரி கூலிங் சிஸ்டம் மற்றும் ரி-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் வாகனத்தின் டிரைவிங் ரேன்ஜ்-ஐ அதிகளவில் எதிர்பார்க்க முடியும்.
மகிழ்ச்சி:
“டாடா ஏஸ் மாடல் இந்தியாவின் வெற்றிகரமான வர்த்தக வாகனம் ஆகும். இது போக்குவரத்து துறையில் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பல லட்சம் வெற்றிகர தொழிலதிபர்களை ஆண்டு வாக்கில் உருவாக்கி இருக்கிறது. இது, மேம்பட்ட தொழில்நுட்பம், சுத்தமான மற்றும் ஸ்மார்ட் மொபிலிட்டி தீர்வுகளின் மூலம் தனது பாரம்பரியத்தை தொடரும். வர்த்தக வாகனங்களை எலெக்ட்ரிக் வெர்ஷன்களாக மாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் என் சந்திரசேகரன் தெரிவித்து இருக்கிறார்.