சூப்பர் ஸ்டைலிங்... அசத்தல் அப்டேட்ஸ்... ஸ்கோடா குஷக் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்...!

By Kevin Kaarki  |  First Published May 9, 2022, 2:59 PM IST

மற்ற மாண்ட் கர்லோ எடிஷன்களை போன்றே குஷக் மாடலிலும் ஸ்கோடா நிறுவனம் மேம்பட்ட ஸ்டைலிங் எலிமண்ட்கள் மற்றும் கூடுதல் அம்சங்களை வழங்கி இருக்கிறது.


ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த புதிய ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷனை அறிமுகம் செய்து விட்டது. புதிய ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷன் மாடலின் விலை ரூ. 15 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

புதிய குஷக் மாண்ட் கர்லோ எடிஷன் குஷக் மாடலின் டாப் எண்ட் வேரிண்யடின் மேல் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஸ்கோடா குஷன் மாண்ட் கர்லோ எடிஷன் விலை அதன் டாப் எண்ட் மாடலை விட ரூ. 80 ஆயிரம் அதிகம் ஆகும். மற்ற மாண்ட் கர்லோ எடிஷன்களை போன்றே குஷக் மாடலிலும் ஸ்கோடா நிறுவனம் மேம்பட்ட ஸ்டைலிங் எலிமண்ட்கள் மற்றும் கூடுதல் அம்சங்களை வழங்கி இருக்கிறது. இவை காரின் பிரீமியம் மற்றும் ஸ்போர்ட் தரத்தை மேம்படுத்திக் கொடுக்கிறது.

Tap to resize

Latest Videos

டிசைன் அம்சங்கள்:

இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக ஸ்கோடா குஷக் இருந்து வருகிறது. இதன் மாண்ட் கர்லோ வெர்ஷன் மாடலின் முன்புற ஃபெண்டர்களில் மாண்ட் கர்லோ பேட்ஜிங் இடம்பெற்று இருக்கிறது. இந்த கார் டொர்னாடோ ரெட் மற்றும் கேண்டி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் கிரில் சரவுண்ட்கள், முன்புறம் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்களில் கிளாசி பிளாக் பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது.

இந்த எஸ்.யு.வி. மாடலில் ஸ்கோடாவின் பாரம்பரிய க்ரிஸ்டலைன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டே-டைம் ரன்னிங் லைட்கள், க்ரிஸ்டலைன் ஸ்ப்லிட் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷனின் டேஷ்போர்டு, செண்டர் கன்சோல், இண்டீரியர் டோர் ஹேண்டில்கள் மற்றும் டோர் பேனல்களில் சிவப்பு நிற அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளது. 

என்ஜின் விவரங்கள்:

ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷனில் 1.0 லிட்டர் TSI என்ஜின், 1.5 லிட்டர் TSI மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் 1 லிட்டர் என்ஜினில் 113 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 175 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. 

இதன் 1.5 லிட்டர் என்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. 

click me!