ஸ்கோடா குஷக் எஸ்.யு.வி. புது வேரியண்ட்கள் அறிமுகம்... விலை இவ்வளவு தானா?

By Kevin Kaarki  |  First Published May 3, 2022, 4:23 PM IST

ஸ்கோடா குஷக் ஆக்டிவ் பீஸ் வேரியண்ட் விலை அதன் ஆக்டிவ் வேரியண்டை விட ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் வரை குறைவு ஆகும். 


ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் எஸ்.யு.வி. மாடலின் இரண்டு புது வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. அதன்படி ஸ்கோடா குஷக் பேஸ் வேரியண்ட் விலை இந்தியாவில் தற்போது ரூ. 9 லட்சத்து  99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இரண்டு புது வேரியண்ட்கள் ஆக்டிவ் பீஸ் மற்றும் ஆம்பிஷன் கிளாசிக் என அழைக்கப்படுகின்றன. 

ஸ்கோடா குஷக் ஆக்டிவ் பீஸ் வேரியண்டில் 1 லிட்டர் TSI என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.  இதன் விலை ஆக்டிவ் வேரியண்டை விட ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் குறைவு ஆகும். விலை குறைவாக நிர்ணயம் செய்ய ஸ்கோடா நிறுவனம் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் மற்றும் ஸ்பீக்கர்களை நீக்கி இருக்கிறது.

Tap to resize

Latest Videos

புது வேரியண்ட்:

புதிய ஆம்பிஷன் கிளாசிக் மாடல் ஸ்கோடா குஷக் ஆம்பிஷன் வேரியண்டின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த மாடலில் 1 லிட்டர் TSI என்ஜின், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட் விலை குஷக் ஆம்பிஷன் மாடலை விட ரூ. 50 ஆயிரம் குறைவு ஆகும். இந்த மாடலிலும் சில அம்சங்கள் நீக்கப்பட்டு, காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

இந்திய சந்தையில் புதிய ஸ்கோடா குஷக் ஆம்பிஷன் மாடல்  மேனுவல் வேரியண்ட் விலை ரூ. 12 லட்சத்து 69 ஆயிரம் என்றும் ஸ்கோடா குஷக் ஆம்பிஷன் மாடல் ஆட்டோமேடிக் வேரியண்ட் விலை ரூ. 14 லட்சத்து 09 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரண்டு புது வேரியண்ட்கள் தவிர ஸ்கோடா நிறுவனம் விரைவில் குஷக் மாண்ட் கர்லோ எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

என்ஜின் விவரங்கள்:

ஸ்கோடா குஷக் மாடல் 1 லிட்டர், 3 சிலிண்டர் TSI பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் TSI என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 178 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 1.5 லிட்டர்  என்ஜின் 150 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

click me!