ரெனால்ட் நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் பெட்ரோல் என்ஜின், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வரும் கார் மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்து வழங்கி வருகிறது. இவை இந்த மாதத்தின் இறுதி தேதி வரை வழங்கப்பட இருக்கின்றன. தள்ளுபடி சலுகைகள் ரெனால்ட் நிறுவனத்தின் க்விட், டிரைபர் மற்றும் கைகர் போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. அனைத்து மாடல்களும் பெட்ரோல் என்ஜின், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ரெனால்ட் க்விட்:
ரெனால்ட் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் க்விட் மாடல் மார்ச் மாத வாக்கில் அப்டேட் செய்யப்பட்டது. புது அப்டேட் படி ரெனால்ட் க்விட் புது வேரியண்டில் கிடைக்கிறது. இதன் வெளிப்புறம் புது நிறம் மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 2021 ரெனால்ட் க்விட் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்களை ரெனால்ட் நிறுவனம் வழங்குகிறது. இத்துடன் ரூ. 37 ஆயிரம் வரையிலான லாயல்டி பலன்கள், ரூ. 10 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது.
ரெனால்ட் க்விட் 2022 மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள், ரூ. 37 ஆயிரம் மதிப்பிலான லாயல்டி பலன்கள், ரெனால்ட் நிறுவனத்தின் ரிலிவ் ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் ரூ. 10 ஆயிரம் சலுகை வழங்கப்படுகிறது. ரெனால்ட் க்விட் RXE 0.8 லிட்டர் வேரியண்ட்களுக்கு மட்டுமே லாயல்டி பலன்கள் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் டிரைபர்:
ரெனால்ட் டிரைபர் 2021 எம்.பி.வி. மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள், ரூ. 44 ஆயிரம் லாயல்டி பலன்கள், ரூ. 10 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. புதிய 2022 மாடலுக்கு ரூ. 44 ஆயிரம் லாயல்டி பலன்கள், ரெனால்ட் நிறுவனத்தின் ரிலிவ் திட்டத்தின் கீழ் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ரெனால்ட் கைகர்:
ரெனால் நிறுவனம் சப்-4 மீட்டர் பி-எஸ்.யு.வி. மாடலாக கைகர் விளங்குகிறது. இந்த மாடுல்க்கு ரூ. 55 ஆயிரம் வரையிலான லாயல்டி பலன்கள், ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை மற்றும் ரெனால்ட் நிறுவனத்தின் ரிலிவ் திட்டத்தின் கீழ் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மூன்று மாடல்களுடன் ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூரல் சலுகையின் கீழ் ரூ. 5 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை விவசாயிகள், சார்பன்ச் மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் இதனை பெற ரெனால்ட் அங்கீகரித்த தரவுகள் வைத்திருக்க வேண்டும்.