ஓப்போ ஏ55(OPPO A55), ஓப்போ நிறுவனத்தின் ஏ வரிசை ஸ்மார்ட்ஃபோன்களின் லேட்டஸ்ட் மாடல். ஹேண்ட்செட் ஸ்போர்ட்ஸ் டிரெண்டியான டிசைனை கொண்ட ஸ்டைலிஷான ஃபோன். 5000mAh பேட்டரி, 50MP AI டிரிபிள் கேமரா, ஸ்டோரேஜை பொறுத்தமட்டில் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என 2 வகைகள் உள்ளன. மைக்ரோ எஸ்டி கார்டின் மூலம் 256 ஜிபி வரை விரிவு செய்துகொள்ளலாம்.
ஓப்போ ஏ55(OPPO A55), ஓப்போ நிறுவனத்தின் ஏ வரிசை ஸ்மார்ட்ஃபோன்களின் லேட்டஸ்ட் மாடல். OPPO A55 ஹேண்ட்செட் ஸ்போர்ட்ஸ் டிரெண்டியான டிசைனை கொண்ட ஸ்டைலிஷான ஃபோன். 5000mAh பேட்டரி, 50MP AI டிரிபிள் கேமரா, ஸ்டோரேஜை பொறுத்தமட்டில் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என 2 வகைகள் உள்ளன. மைக்ரோ எஸ்டி கார்டின் மூலம் 256 ஜிபி வரை விரிவு செய்துகொள்ளலாம்.
OPPO A55 8.4மிமீ ஸ்லீக் மற்றும் ஸ்லிம் டிசைன். இதன் எடை 193கிராம். 16.55 செமீ பன்ச் ஹோல் எல்சிடி டிஸ்ப்ளே. கண்களுக்கு பாதுகாப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அல்ட்ரா மாடர்ன் லுக்கை பெற்ற இந்த ஸ்மார்ட்ஃபோன், ரெயின்போ ப்ளூ மற்றும் ஸ்டாரி கருப்பு ஆகிய 2 நிறங்களில் கிடைக்கிறது.
அபரிமிதமான பேட்டரி திறனை கொண்டது. இதன் பேட்டரி திறன் 5000mAh ஆகும். இரவு சார்ஜ் செய்தால், பேட்டரி ஸ்விட்ச் ஆஃபே ஆகாமல் பகல் முழுவதும் பயன்படுத்தலாம். 18W அதிவேக சார்ஜ் விரைவில் சார்ஜ் ஆவதை உறுதி செய்கிறது. சார்ஜ் ஆவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
கேமராவில் எப்போதுமே ஓப்போ கவனம் செலுத்தும். பின்பக்க கேமரா - 50MP AI Triple Camera, 2MP Bokeh Camera, 2MP Macro Camera. இந்த ஃபோன் பிக்ஸல் பின்னிங் டெக்னாலஜியை பெற்றுள்ளது. இதன்மூலம், ஃபோன் மெமரி ஆக்கிரமிப்பை குறைக்க ஏதுவாக 12.5MP ஆக ஃபோட்டோக்களை மாற்றிக்கொள்ள முடியும்.
செல்ஃபி கேமரா 16MP. இந்த ஃபோனில் உள்ள 360 டிகிரி ஃபில் லைட் வசதி, மங்கலான/இருட்டான சூழலிலும் தெளிவான செல்ஃபிக்களை எடுக்க உதவுகிறது. AI பியூடிஃபிகேஷன், பயனாளர்கள் பியூடிஃபிகேஷனை தங்களுக்கு ஏற்றவகையில் மாற்ற உதவுகிறது.
OPPO A55 ஃபோனில் கூடுதல் வசதியாக 15 ஃபோட்டோ ஃபில்ட்டர்கள் உள்ளன. இந்த ஃபில்ட்டர் வசதி வீடியோக்களுக்கும் பொருந்தும். 10 பில்ட்-இன் வீடியோ ஃபில்ட்டர்கள் உள்ளன. இது அருமையானது.
கேமராவிலிருந்து அடுத்ததாக செயல்திறனை பற்றி பார்ப்போம். 64GB+4GB மாடல் மற்றும் 128GB+6GB மாடல் ஆகிய இரண்டுமே 2 சிம் கார்டு வசதிகளை கொண்டது. ஸ்டோரேஜ் திறனை 256ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் விரிவுபடுத்திக்கொள்ளலாம். மீடியாடெக் ஹீலியோ ஜி35 ஆக்டா-கோர் பிராசசர், 2.3GHz வரையிலான வேகத்தில் செயல்படும். இது பயனாளர்களுக்கு அருமையான அனுபவத்தை கொடுக்கும். 5 விரல்களையும் பயன்படுத்தி ஃபிங்கர்பிரிண்ட் வசதி பக்கவாட்டில் இருக்கும். அதுபோக, AI முக அன்லாக் வசதியும் உள்ளது.
மிகச்சிறந்த லுக்கை கொண்ட ஃபோன் மட்டுமல்ல; இதன் செயல்திறனும் மிகச்சிறந்தது. ColorOS சிஸ்டம் பூஸ்டர் 11.1 இந்த ஃபோனின் செயலை ஸ்மூத்தாக்குகிறது. ஃப்ளெக்ஸ் ட்ராப், ஸ்டோரேஜ் ஆப்டிமைசர், ஐடல் டைம் ஆப்டிமைசர், கூகுல் லென்ஸ் ஆகிய இந்த ஃபோனின் வசதிகள் அனைத்தும், பயனாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும்.
பாக்கெட்டில் வைப்பதற்கு வசதியான ஸ்மார்ட்ஃபோன். OPPO A55-ன் 2 விதமான மாடல்கள் விற்பனைக்கு உள்ளன. 4GB+64GB மாடல் விலை ரூ.15,490. இந்த ஃபோன் அக்டோபர் 3லிருந்து விற்கப்படுகின்றன. 6GB+128GB மாடல் விலை ரூ.17,490. இது அக்டோபர் 11லிருந்து அமேசான் மற்றும் ரீடெய்லர் கடைகளிலும் விற்பனைக்கு வருகிறது. திறன்வாய்ந்த பேட்டரி, சூப்பர் ஃபாஸ்ட் பிராசசர் என அருமையான ஃபோன்.
OPPO A55 அருமையான ஆஃபர்களில் விற்பனையாகிறது. எச்டிஎஃப்சி டெபிட்/க்ரெடிட் கார்டுகள் மூலம் அமேசானில் ரூ.3000 தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் 3 மாதத்திற்கான அமேசான் பிரைம் சந்தா இலவசம். பிரைம் உறுப்பினர்களுக்கு 6 மாதம் No Cost EMI.
OPPO E-ஸ்டோரில் வாங்குபவர்களுக்கு 10% தள்ளுபடி உண்டு. இந்த தள்ளுபடி கோடாக் மகேந்திரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஆக்ஸிஸ் பேங்க் ஆகிய வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 3 மாதங்களுக்கு No Cost EMI வசதி உண்டு.
மெயின்லைன் ரீடெய்லர்களிடம் ரூ.3000 வரை கேஷ்பேக் பெறலாம். சில கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு 3 மாதம் வரை No cost EMI வசதி உண்டு. பஜாஜ் ஃபின்செர்வ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், எச்டிபி ஃபைனான்சியல் சர்வீஸஸ், டிவிஎஸ் கிரெடிட், எச்டிஎஃப்சி பேங்க், கோடாக், ஐசிஐசிஐ பேங்க் வாடிக்கையாளர்களுக்கு ஃபைனான்ஸ் உதவி கிடைக்கும்.