எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ பிடிக்கும் நிகழ்வுகள் பற்றி ஓலா எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.
எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்து எனில், முதலில் நினைவுக்கு வருவது ஓலா எலெக்ட்ரிக் மட்டும் தான். மற்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் அடிக்கடி வெடித்து சிதறும் நிலையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது முதல் அதிக பிரிபல் அடைந்து விட்டது. எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ பிடிக்கும் நிகழ்வுகள் பற்றி ஓலா எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.
புதிய ஆட்டோமொபைல் பிரிவில் எலெக்ட்ரிக் வாகன தீ விபத்து சம்பவங்கள் மிக எளிதில் கவனத்தை ஈர்த்து விடுகின்றன என்று ஓலா எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். எலெக்ட்ரிக் வாகன தீ விபத்து சம்பவங்கள் பற்றிய பாதுகாப்பு பற்றி தனியார் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் பேசி இருந்ததாக கூறப்படுகிறது.
குறிக்கோள்:
“எதிர்காலத்திலும் இது போன்று நடக்கும், ஒரு வேளை நடக்கலாம். ஆனால் எங்களின் குறிக்கோள் வாகனத்தின் ஒவ்வொரு பிரச்சினையையும் கவனித்து சரி செய்வது தான். ஏதேனும் பிரச்சினை இருந்தால், அதனை உடனே சரி செய்து விடுவோம். சிறு பிரச்சினைகள் காரணமாக எதிர்காலத்திலும் ஸ்கூட்டர்களில் தீ விபத்து ஏற்படலாம். சாலைகளில் வலம் வரும் 50 ஆயிரம் ஓலா இ ஸ்கூட்டர்களில் ஒன்று தான் வெடித்து இருக்கிறது,” என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.
“எலெக்ட்ரிக் வாகனங்களுடன் ஒப்பிடும் போது, பெட்ரோல் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் வெடித்து சிதறி இருக்கின்றன. தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உடனடியாக ரிகால் செய்த மூன்று நிறுவனங்களில் ஓலா எலெக்ட்ரிக் ஒன்று ஆகும். அனைத்து ஸ்கூட்டர்களும் ரிகால் செய்யப்படவில்லை. தீ பிடித்து எரிந்து ஒரு மாடலுடன் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்கள் மட்டுமே ரிகால் செய்யப்பட்டன,” என்று ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலர் அருன் குமார் தெரிவித்தார்.
மற்ற எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கான ஓகினவா ஆட்டோடெக் மற்றும் பியூர் இ.வி. போன்ற நிறுவனங்களும் தங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ரிகால் செய்தன. இதுவரை சுமார் 7 ஆயிரம் இ ஸ்கூட்டர்கள் ரிகால் செய்யப்பட்டுள்ளன.