ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின், கனெக்டெட் அம்சங்கள்... வேற லெவலில் உருவாகும் புது டொயோட்டா இன்னோவா..!

By Kevin Kaarki  |  First Published May 16, 2022, 3:40 PM IST

புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் இன்னோவா க்ரிஸ்டா மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சி அளிக்கும் என கூறப்படுகிறது.


டொயோட்டா நிறுவனத்தின் பிரபல எம்.பி.வி. மாடல் இன்னோவா விரைவில் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா இருக்கிறது. அந்த வகையில் மேம்படுத்த அம்சங்களுடன் உருவாகி இருக்கும் அடுத்த தலைமுறை டொயோட்டா இன்னோவா மாடல் இந்த ஆண்டு தீபாவளி காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

புதிய டொயோட்டா இன்னோவா மாடல் மோனோக் சேசிஸ் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் டீசல் என்ஜினுக்கு மாற்றாக பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் இன்னோவா க்ரிஸ்டா மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சி அளிக்கும் என கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

பிரபல சேசிஸ்:

அடுத்த தலைமுறை இன்னோவா மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் சேசிஸ் மிகவும் பிரபலமான ஒன்று ஆகும். TNGA-C அல்லது GA-C என அழைக்கப்படும் சேசிஸ் ஆது டொயோட்டா கொரோலா மாடலில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஜப்பானில் விற்பனை செய்யப்படும் 670B மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஜப்பானில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா வோக்சி மற்றும் நோவா மாடல்களின் அம்சங்கள் இதில் வழங்கப்பட இருக்கிறது.

புதிய டொயோட்டா இன்னோவா மாடல் 4.7 மீட்டர் நீளமாக இருக்கிறது. இது இன்னோவா க்ரிஸ்டா மாடலை விட சற்றே சிறியது ஆகும். அளவில் சிறியதாக இருந்த போதிலும் புதிய மாடல் அதிக இடவசதியை கொண்டிருக்கும். புதிய இன்னோவா மாடல் வீல்பேஸ் 2850 மில்லிமீட்டரப் அளவில் உள்ளது. இதன் வீல்களுக்கு இடையில் அதிக இடைவெளி உள்ளது. GA-C பிளாட்பார்ரமில் பாடி அளவில் செங்குத்தாக சி பில்லர்கள் உள்ளன. இதனால் காரின் உள்புறத்தில் அதிக இடவசதி கிடைக்கும்.

எடை குறைவு:

தற்போதைய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடலை விட புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா மாடல் 170 கிலோ வரை எடை குறைவாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. உள்புறத்தில் அதிக இடவசதி கொண்டு இருக்கிறது. காரின் எடை குறைந்து இருப்பதால், அதிக மைலேஜ் மற்றும் செயல்திறன் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். 

புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா மாடலில் 2 லிட்டர் ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஹைப்ரிட் சிஸ்டம் THS II-வின் (டொயோட்டா ஹைப்ரிட் சிஸ்டம்0THS) மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும். இது டீசல் காரை விட அதிக மைலேஜ் வழங்கும்.  இந்த ஹைப்ரிட் சிஸ்டம் எடை குறைவாகவும், அதிக செயல்திறன் வழங்குகிறது. இதில் இரண்டு மோட்டார் செட்டப் வழங்கப்படுகிறது. 

அதிநவீன அம்சங்கள்:

புதிய இன்னோவா மாடல் மிகவும் தனித்துவம் மிக்க தோற்றம் கொண்டிருக்கும். GA-C பிளாட்பார்மில் உருவாகி வருவதால் புதிய டொயோட்டா மாடல் பல்வேறு கனெக்டெட் அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். அதன்படி புதிய இன்னோவா மாடலில் கூல்டு சீட்கள், வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்பட ஏராளமான இதர அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. 

click me!