புதிய X1 மாடலின் அசத்தல் டீசர் வெளியீடு... எதிர்பார்ப்பை எகிற செய்த பி.எம்.டபிள்யூ.

By Kevin Kaarki  |  First Published May 2, 2022, 4:11 PM IST

புதிய பி.எம்.டபிள்யூ. X1 மாடலில் 305 ஹெச்.பி. திறன் வழங்கும் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது.


பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பி.எம்.டபிள்யூ. விற்பனையாளர் புதிய X1 மாடலுக்கான விளம்பரத்தை வெளியிட்டு இருக்கிறார். இதில் புதிய தலைமுறை எஸ்.யு.வி. மாடலின் டீசர் படம் இடம்பெற்று உள்ளது. புதிய பி.எம்.டபிள்யூ. X1 மாடல் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு, மேம்பட்ட பவர்டிரெயின்கள் வழங்கப்படுகின்றன. மேலும் முதல் முறையாக ஃபுல் எலெக்ட்ரிக் வெர்ஷன் iX1 என பெயரிடப்பட்டு உள்ளது. 

டீசர் வெளியீடு:

Tap to resize

Latest Videos

புதிய பி.எம்.டபிள்யூ. கார் இந்த ஆண்டே அறிமுகம் செய்யப்படும் என்பதை அந்நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தி விட்டது. புதிய தலைமுறை பி.எம்.டபிள்யூ. X1 மாடல் பற்றிய விவரங்கள் ரகசியமாகவே உள்ளன. எனினும், அடுத்த தலைமுறை எஸ்.யு.வி. மாடல் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. அதன்படி புதிய பி.எம்.டபிள்யூ. X1 மாடலில் 305 ஹெச்.பி. திறன் வழங்கும் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது.

இத்துடன் புதிய X1 மாடலின் பிளக்-இன் ஹைப்ரிட் வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய பி.எம்.டபிள்யூ. மாடல் அளவில் மற்ற பி.எம்.டபிள்யூ. எஸ்.யு.வி.-க்களை போன்றே அளவில் பெரியதாக இருக்கும் என தெரிகிறது. புதிய 7 சீரிஸ் மாடலை போன்றே புதிய பி.எம்.டபிள்யூ. எலெக்ட்ரிக் X1 மாடல் அதன் ICE வெர்ஷன்களுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

ஆட்டோ எக்ஸ்போ:

தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பி.எம்.டபிள்யூ. X1 மாடல் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது ஆகும். இந்த எஸ்.யு.வி. மாடல் 2020 வாக்கில் பெரிய அளவில் அப்டேட் செய்யப்பட்டது. இதில் காஸ்மெடிக் மாற்றங்கள், பி.எஸ். 6 ரக என்ஜின்கள், புதிதாக 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. 

மெர்சிடிஸ் பென்ஸ் GLA மற்றும் வால்வோ XC40 போன்ற மாடல்களுக்கு போட்டியாளராக பி.எம்.டபிள்யூ. X1 மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடலுக்கு மற்றொரு போட்டியாளரான புதிய தலைமுறை ஆடி Q3 மாடல் இந்த ஆண்டு அறிமுகம் ஜசெய்யப்பட இருக்கிறது.

tags
click me!