ஒரே முறை சார்ஜ் செய்தால் போதும்... ஒன்றரை மாதத்திற்கு சார்ஜ் நிற்கும் புது போன்..!

By ezhil mozhi  |  First Published Feb 27, 2019, 8:21 PM IST

ஒன்றரை மாதம் வரை சார்ஜ் இருக்கக்கூடிய மொபைல் போனை ஆவெனிர் நிறுவனம் சந்தையில் விட்டுள்ளது.


ஒரே முறை சார்ஜ் செய்தால் போதும்... ஒன்றரை மாதத்திற்கு சார்ஜ் நிற்கும் புது போன்..! 

ஒன்றரை மாதம் வரை சார்ஜ் இருக்கக்கூடிய மொபைல் போனை ஆவெனிர் நிறுவனம் சந்தையில் விட்டுள்ளது.

Latest Videos

undefined

தற்போதைய காலத்தில் யாரிடம் தான் ஸ்மார்ட் போன் இல்லை.. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறார்கள் அல்லவா..? அவ்வாறு பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் எந்த அளவிற்கு சார்ஜ் நிற்கிறது..? எவ்வளவு நேரம் பயன்படுத்த முடிகிறது என்பதில் உள்ள மிக முக்கிய விஷயம்.

ஒருசிலர் வைத்துள்ள மொபைலோகளில் தொடர்ந்து அரை மணி நேரம் பயன்படுத்தினாலே போதும் உடனே சார்ஜ் ஏற்ற வேண்டிய நிலைக்கு வரும். ஒரு சில போன்கள் அப்படி இருக்காது.. சற்று கூடுதலான நேரம் சார்ஜ் நிற்கும். இந்த பிரச்சனையை போக்கும் வண்ணம், ஒரு முறை சார்ஜ் செய்தாலே போதும், ஒன்றரை மாதம் வரை அப்படியே சார்ஜ் இருக்கும் வகையில் ஆவெனிர் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இது,18,000mAh சக்தி கொண்ட பேட்டரியை கொண்டுள்ளது. அதாவது மற்ற ஸ்மார்ட் போனில் அதிகபட்சமாக 5,000 mAh பேட்டரி உள்ளது. இந்த மொபைலோ வரும் ஜூன் முதல் சந்தைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டூயல் சிம் கார்டுகள் உடன், Qualcomm Snapdragon 636 processor கொண்டது.  6.2 இன்ச் டிஸ்பிளே கொண்டது , ரேம் 6 ஜிபி,128 GB, கருப்பு, ஊதா என  இரண்டு நிறங்களில் மட்டும் கிடைக்க கூடும். இதனை  சிறப்பம்சம் கொண்ட இந்த மொபைலின் வில்லை என்னவென்று சரி வர தெரியவில்லை.

click me!