கார் பிரியர்களே...! மீண்டும் "மாருதி கார்"...செம்ம சூப்பர் மாடல்ல அறிமுகம்..!

By thenmozhi g  |  First Published Sep 8, 2018, 6:48 PM IST

மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த வருடம் மேம்படுத்தப்பட்ட வேகன் ஆர் காரை அறிமுகம் செய்ய உள்ளது என தகவல் வெளியாகி கார் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளது.
 


மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த வருடம் மேம்படுத்தப்பட்ட வேகன் ஆர் காரை அறிமுகம் செய்ய உள்ளது என தகவல் வெளியாகி கார் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளது.

பொதுவாகவே, வேகன் ஆர் மாடல் கார் விரும்பாத கார் பிரியர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், கார் பிரியர்களுக்கு பிடித்த காராகவும் உள்ளது. காரணம் யூசர் பிரண்ட்லி, ஒரு சிறு குடும்பம் அதாவது நான்கு பேர் தாரளமாக அமர்ந்து செல்லும் படியும், ஏசி கண்டிஷன் என அனைத்தும் நல்லாவே இருக்கும்.

Latest Videos

undefined

போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் மிக எளிதில் ஓடுவதற்கும் சிறந்த வாகனம் வேகன் ஆர் என்றே கூறலாம். இதன் விலையும் 5 லட்சம் அளவில் தான் உள்ளது என்பதால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். 

இந்நிலையில், புதிய வேகன் ஆர் 2019 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதியதாக வர உள்ள வேகன் ஆர் ஹேட்ச்பேக் தற்போது ஜப்பானில் விற்பனையில் உள்ளது. இதன் எஞ்சின் 660 சிசி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் கார் இந்தியாவிற்கு வந்தால் இது நான்காவது தலைமுறை காராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால், மூன்றாவது மற்றும் ஐந்தாவது தலைமுறை வேகன் ஆர் கார் இந்தியாவில் அறிமுகம் செய்ய  வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தற்சமயம் வெளியாக இருக்கும் வேகன் ஆர் மாடலில் 1.0 லிட்டர் K10 சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் மாருதி ஆல்டோ மற்றும் செலரியோ மாடல்களில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த வேகன் ஆர் கார் பெட்ரோலில் இயங்கக்கூடியதாக உள்ளது. வேகன் ஆர் காரை பொறுத்தவரை  பழைய மாடலாக இருந்தாலும் இன்று வரை பயனர்கள் அதிக விருபத்துடன் காரை வாங்கிகின்றனர்.
   

click me!