தொழில்நுட்பம் வளர வளர பல்வேறு புதிய படைப்புகள் ஒவ்வொரு நாளும் அறிமுகம் ஆகிக்கொண்டே இருக்கின்றன.
புது வரவு: வாயில சொன்னா மட்டும் போதும்...
தொழில்நுட்பம் வளர வளர பல்வேறு புதிய படைப்புகள் ஒவ்வொரு நாளும் அறிமுகம் ஆகிக்கொண்டே இருக்கின்றன. நம் குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய கூட அவர்களுக்கு தேவையான படங்கள் வீடியோக்கள் சில குறிப்புகள் இதனையெல்லாம் எடுக்க கணினி மையத்திற்கு சென்று எடுப்பார்கள்
எனவே பிரிண்டர்களின் தேவை எப்போதும் நமக்கு மிக முக்கியமானதாக உள்ளது. இந்நிலையில் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய நம் வீட்டிலேயே பயன்படுத்தக்கூடிய மிக சிறப்பான ஒரு பிரிண்டர் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதனுடைய வேலை பேப்பரில் பிரிண்ட் எடுப்பது மட்டுமல்லாமல், போட்டோக்களையும் பிரிண்ட் செய்து கொள்ளலாம். நம் வீட்டில் உள்ள அலங்கரிக்கத் தேவையான போட்டோக்களையும் இதன் மூலம் கலர் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த பிரிண்டரை நாம் தொடாமலேயே வேலை செய்ய வைக்க முடியும். இதற்கான செயலியை நம் போனில் டவுன்லோட் செய்து கொண்டு நமக்கு வேண்டிய படத்தை இதன் மூலம் அனுப்பலாம். நாம் மிக தூரமாக இருந்தாலும் இந்த செயலி மூலம் அதற்கு மெசேஜ் சென்று அதுவாகவே பிரிண்ட் எடுத்து விடும். அது மட்டும் இல்லங்க... நாம வாய்ஸ் மெசேஜ் கொடுத்தாலும், ஸ்கேன் செய்து பிரிண்ட் எடுத்து விடும் அற்புத வசதியுடன் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, பேப்பர் காலியாக போகிறது என்றால் உடனடியாக நமது செல்போனுக்கு தகவல்அனுப்பி விடும். இது போன்ற போன்ற சிறப்பம்சங்களை கொண்ட இந்த பிரிண்டருக்கு அமோக வரவேற்பு கிடைத்து உள்ளது.