புதிய SWIFT,DZIRE கார்களில் பழுது: திரும்பப் பெற சுஸூகி நிறுவனம் திட்டம்

 |  First Published Aug 4, 2018, 4:39 PM IST

மாருதி சுஸூகி நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 1,279 SWIFT மற்றும் DZIRE கார்களை திரும்பப் பெற உள்ளது.


மாருதி சுஸூகி நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 1,279 SWIFT மற்றும் DZIRE கார்களை திரும்பப் பெற உள்ளது. கடந்த மே மாதம் 7-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட NEW SWIFT, மற்றும் NEW DZIRE கார்களில், விபத்தின் போது தலை அடிபவடுவதில் இருந்து காப்பாற்றும் 'Air Pack Controller Unit'-ல் பழுது இருக்க வாய்ப்புள்ளதாக மாருதி சுஸூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து Air Pack Controller Unit'-ல் பழுது இருப்பதை கண்டறிந்து இலவசமாக சரி செய்யும் பணி ஜூலை 25-ம் தேதி முதல் 
நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பழுதை சரி செய்ய கார் டீலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

click me!