உருஸ் எலெக்ட்ரிக் மாடலை உருவாக்கும் லம்போர்கினி - எப்போ வெளியாகுது தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published May 15, 2022, 3:36 PM IST

சட்டப்படி முழுமையாக ரத்து செய்யப்படும் வரை லம்போர்கினி நிச்சயம் கம்பஷன் என்ஜின் கொண்ட வாகனங்களை விற்பனை செய்யும் என பரோகெர்ட் தெரிவித்து இருக்கிறார். 


லம்போர்கினி நிறுவனத்தின் சக்திவாய்ந்த எஸ்.யு.வி. மாடல் உருஸ் விரைவில் முழுமையான எலெக்ட்ரிக் மாடல் வடிவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியாகி இருக்கும் புது தகவல்களின் படி லம்போர்கினி நிறுவனத்தின் டிசைன் பிரிவு தலைவர் மிட்ஜா பரோகெர்ட் ஆல்-எலெக்ட்ரிக் லம்போர்கினி உருஸ் எஸ்.யு.வி. வெளியீடு பற்றிய தகவலை வெளியிட்டு இருக்கிறார் என கூறப்பட்டு உள்ளது. எனினும், இதற்கு மேலும் சில காலம் ஆகும் என தெரிகிறது.

முழுமையான எலெக்ட்ர்க் கார் ஒன்றை உருவாக்கி வரும் லம்போர்கினி 2027 ஆம் ஆண்டு வாக்கில் இந்த மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு தனது கார் மாடல்களை எலெக்ட்ரிக் வடிவில் மாற்றவும், எலெக்ட்ரிக் வாகன துறையில் கவனம் செலுத்தவும் 1.5 பில்லியன் யூரோக்கள் முதலீடு செய்ய இருப்பதாக லம்போர்கினி நிறுவனம் அறிவித்து இருந்தது. 

Tap to resize

Latest Videos

உருஸ் எலெக்ட்ரிக்:

லம்போர்கினி உருவாக்கி வருவதாக அறிவித்த மாடல் ஏற்கனவே அந்த நிறுவனம் விற்பனை செய்து வரும் மாடலை தழுவி இருக்குமா அல்லது முற்றிலும் புது மாடலாக இருக்குமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், லம்போர்கினி உருஸ் ஆல் எலெக்ட்ரிக் மாடல் அந்த நிறுவனத்தின் திட்டப்படி அறிமுகமாகும் என தெரிகிறது. 

“இப்போதோ அல்லது தாமதமாகுமோ, உருஸ் நிச்சயம் எலெக்ட்ரிக் வடிவம் பெறும்... உண்மையை சொல்ல போனால், உலகில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் சமூக ஏற்பு - இந்த டிரெண்ட் நிச்சயம் சூடுப் பிடித்துக் கொண்டு வருகிறது. இப்போதே உருஸ் எலெக்ட்ரிக் வேரியண்ட் உருவாகும் என்று நான் கூறவில்லை, ஆனால் இதுபோன்ற கார்களை எலெக்ட்ரிக் வடிவில் மாற்றுவது அர்த்தமுள்ள காரியமாக இருக்கும்,” என பரோகெர்ட் தெரிவித்தார். 

தற்போது விற்பனை செய்யப்படும் உருஸ் மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் குறைவு தான். இந்த தசாப்தத்தின் இறுதியில் தான் உருஸ் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் ஆகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. உருஸ் EV மாடல் மட்டும் இன்றி சட்டப்படி முழுமையாக ரத்து செய்யப்படும் வரை லம்போர்கினி நிச்சயம் கம்பஷன் என்ஜின் கொண்ட வாகனங்களை விற்பனை செய்யும் என பரோகெர்ட் தெரிவித்து இருக்கிறார். 

கம்பஷன் என்ஜின்கள்:

“V10 என்ஜின் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று என பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால், அடுத்த நாற்பது ஆண்டுகளில் உள்ள இளைஞர்கள் இதை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார்களா என்று தெரியவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் கம்பஷன் என்ஜின்களை பிடிக்கும், ஆனால் எலெக்ட்ரிக் துறையில் மாற எனக்கு எந்த விதமான அச்சமும் இல்லை,” என பரோகெர்ட் தெரிவித்தார். 

click me!