காரில் உள்ள அம்சங்கள் ஜெர்மன் நாட்டு பீரீமியம் கார் மாடல்கள் உற்பத்தியாளர்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை கடந்த சில மாதங்களில் அதிகளவு புது மாடல்களை பெற்று இருக்கிறது. உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் மாடல் உற்பத்தியாளரான டெஸ்லா இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த அறிகுறிகளும் இல்லை. இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் அதிகளவு வரி காரணமாக டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்கும முடிவை ஒத்தி வைப்பதாக சமீபத்தில் அறிவித்து உள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வெளியீடு தாமதம் ஆகி இருக்கும் நிலையில், கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் இந்திய எலெக்ட்ரிக் சந்தையில் புது மாடல்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஹூண்டாய் நிறுவனம் தனது EGMP EV பிளாட்பார்மை இந்தியா கொண்டு வருகிறது. இந்த பிளாட்பார்மில் உருவாகி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் முதல் கார் மாடல் என்ற பெருமையை கியா EV6 இருக்கிறது.
புது எலெக்ட்ரிக் மாடல்கள்:
இதைத் தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கியா மற்றும் ஹூண்டாய் நிறுவன எலெக்ட்ரிக் மாடல்கள் அதிக ரேன்ஜ் மற்றும் அதிநவீன டிரைவிங் டைனமிக்ஸ் கொண்டுள்ளன. மேலும் இவற்றில் ஏராளமான அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
புதிய மாடல்களின் இன்-கார் அனுபவசத்தை மேம்படுத்த ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கண்டு இருக்கின்றன. தென் கொரிய நிறுவனத்தின் கியா EV6 மாடல் பிளாக்ஷிப் தர அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த காரில் உள்ள அம்சங்கள் ஜெர்மன் நாட்டு பீரீமியம் கார் மாடல்கள் உற்பத்தியாளர்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
மிக முக்கிய அம்சங்கள்:
ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார் மாடல்களில் இவை மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கின்றன. கியா EV6 மாடலின் மற்ற அம்சங்களை பார்க்கும் போது, ADAS குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. இந்திய சந்தையில் தற்போதைய கியா நிறுவன மாடல்களில் ADAS அதிகளவு அம்சங்களை வழங்குவதில்லை. ADAS பெயரில் பாதுகாப்பு அம்சங்களான மல்டி-கொலிஷன் பிரேக்கிங், AEB, லேன் கீப்பிங் அசிஸ்ட், லேன் ஃபாளோ அசிஸ்ட் மற்றும் பிலைண்ட் ஸ்பாட் கொலிஷன் வார்னிஓங் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.
சர்வதேச சந்தையில் இந்த அம்சங்கள் கியா EV6 ஏர் வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 528 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இந்த கார் ரியர் வீல் டிரைவ் கான்பிகரேஷன் கொண்டிருக்கிறது. கியா EV6 GT லைன் மாடலில் கொலிஷன் அவாய்டைன்ஸ் அசிஸ்ட், ரிவர்ஸ் சரவுண்ட் வியூ மாணிட்டர் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் வியூ மாணிட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் பில்ட் இன் டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், ABS, BAS, ESC, ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹைவே டிரைவிங் அசிஸ்ட் மற்றும் வெஹிகில் ஸ்டேபிலிட்டி மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கியா மாடல்களில் போஸ் ஆடியோ வழங்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் கிடைக்கும் மாடல்களில் பிரீமியம் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 5 ஃபுல் ரேன்ஜ் ஸ்பீக்கர்கள், நான்கு ட்வீட்டர்கள், நான்கு வூஃபர்கள் மற்றும் சப் வூஃபர் உள்ளது. மேலும் இதில் ஆக்டிவ் சவுண்ட் டிசைன் உள்ளது.