ஜியோ வருகைக்கு பிறகு, அனைத்து தொலைத்தொடர்பு நிருவனங்களும் ஆட்டம் காண தொடங்கியது. அதே வேளையில் மக்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி சாதாரண மக்கள் கூட டேட்டா பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.
ஜியோ வருகைக்கு பிறகு, அனைத்து தொலைத்தொடர்பு நிருவனங்களும் ஆட்டம் காண தொடங்கியது. அதே வேளையில் மக்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி சாதாரண மக்கள் கூட டேட்டா பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில், மேலும் ஜியோ வேறு ஒரு சலுகையை அறிவித்து உள்ளது. அந்த வகையில் புதிய ஆட் ஆன் சலுகையை அறிவித்து உள்ளது
ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்கள் இந்த சலுகை மூலம் நல்ல பலன் பெற முடியும். பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகையுடன் மேலும் 2 ஜிபி வரை கூடுதலாக பயன்படுத்தப்படும்.
மை ஜியோ செயலியில் குறிப்பிடப்பட்டு உள்ள வழிகாட்டுதலின் படி, ஒரு குறிப்பிட்ட பயனர்கள் மட்டுமே இதன் மூலம் பயன்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சலுகை இன்றுடன் முடிவடைய உள்ளது என்பது கூடுதல் தகவல்.
ரூ.399 ரீசார்ஜ் சலுகையில் இந்த சிறப்பு சலுகை வழங்கப்பட்டு உள்ளது. இதனுடன் கூடுதலாக டேட்டா வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் படி, தினமும் அன்லிமிடட் கால்ஸ் மற்றும் தினமும் நூறு மெசேஜ் ப்ரீ என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக, ஜியோ ஷோ ரூம் சென்று பழைய மொபைலை கொடுத்து, உடன் ரூ. 501 ரூபாயை செலுத்தி புதிய போனை பெற்றுக்கொள்ளலாம் என ஜியோ ஏற்கனவே அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.