புதிய கிரெட்டா நைட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா..?

By Kevin Kaarki  |  First Published May 3, 2022, 3:57 PM IST

ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் மாடலில் பிளாக் ஏஸ்தெடிக் அம்சங்கள் கார் முழுக்க ஆங்காங்கே வழங்கப்பட்டு இருக்கிறது.


ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது கிரெட்டா நைட் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் விலை ரூ. 13 லட்சத்து 51 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் மாடலில் பிளாக் ஏஸ்தெடிக் அம்சங்கள் கார் முழுக்க ஆங்காங்கே வழங்கப்பட்டு இருக்கிறது.

வெளிப்புறம் டி-குரோம் செய்யப்பட்ட முன்புற கிரில், முன்புறம், பின்புறம் ஸ்கிட் பிளேட், ரூஃப் ரெயில்கள, சி பில்லர் மற்றும் ORVM-களில் கிளாஸ் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. பின்புற டெயில் கேட் பகுதியில் நைட் எடிஷன் லோகோ இடம்பெற்று இருக்கிறது. 

Tap to resize

Latest Videos

ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன்: 

வீல்களை பொருத்தவரை புதிய லோயர் S+ வேரியண்ட்-இல் 16 இன்ச் டார்க் கிரே நிற அலாய் வீல்கள், டாப் எண்ட் SX (O) மாடலில் 17 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. இத்துடன் முன்புற டிஸ்க் பிரேக் கேலிப்பர்கள் சிவப்பு நிறம் கொண்டுள்ளன. கேபின் முழுக்க ஆல்-பிளாக் தீம் செய்யப்பட்டு, லெதர் இருக்கைகள், ஸ்டீரிங் வீல்களில் ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது. 

புதிய ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் மாடலை 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அல்லது 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் வாங்கிக் கொள்ள முடியும். இதன் பெட்ரோல் என்ஜின் 113 பி.ஹெச்.பி. பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 113 பி.ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய கிரெட்டா மாடலுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் SX (O) வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.

விலை விவரங்கள்:

ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் 1.5 லிட்டர் பெட்ரோல் S+ 6MT விலை ரூ. 13 லட்சத்து 51 ஆயிரம்
ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் 1.5 லிட்டர் பெட்ரோல் SX(O) IVT விலை ரூ. 17 லட்சத்து 22 ஆயிரம்
ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் 1.5 லிட்டர் டீசல் S+ 6MT விலை ரூ. 14 லட்சத்து 47 ஆயிரம்
ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் 1.5 லிட்டர் டீசல் SX(O) 6AT விலை ரூ. 18 லட்சத்து 18 ஆயிரம்

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

click me!