எதிர்பார்த்த விலையிலேயே புது ஹோண்டா ஹைப்ரிட் கார் அறிமுகம்... எவ்வளவு தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published May 4, 2022, 4:22 PM IST

புதிய ஹோண்டா காரில், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மற்றும் ஹோண்டா சென்சிங் சூட் மற்றும் ஆக்டிவ் சேப்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 


ஹோண்டா கார்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய ஹோண்டா சிட்டி e:HEV ஹைப்ரிட் மாடல் விலையை அறிவித்து இருக்கிறது. புதிய ஹோண்டா சிட்டி e:HEV ஹைப்ரிட் மாடலின் விலை ரூ. 19 லட்சத்து 50 ஆயிரம் என துவங்குகிறது. இந்த விலை ஹோண்டா சிட்டி ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ. 4.5 லட்சம் அதிகம் ஆகும். இந்த காரின் வினியோகம் இன்று முதல் துவங்குகிறது. 

ஹோண்டா நிறுவனத்தின் சென்சிங் அல்லது ADAS போன்ற அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் முதல் ஹோண்டா கார் மாடல் இது ஆகும். ஹோண்டா சிட்டி e:HEV ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் உள்ள ஹோண்டா நிறுவன உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. 

Tap to resize

Latest Videos

புதிய ஹோண்டா சிட்டி e:HEV  ஹைப்ரிட் மாடலில் புளூ லைன் ஹோண்டா லோகோ, புது டிசைன் கொண்ட ஃபாக் லைட் கார்னிஷ், பின்புறம் eHEV லோகோ இடம்பெற்று உள்ளது. இத்துடன் பூட் லிப் ஸ்பாயிலர், புதிய ரியர் பம்ப்பர் டிப்யூசர் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் உள்புறம் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட்  சிஸ்டம், டூயல் டோன் ஐவரி மற்றும் பிளாக் நிற ஸ்கீம் கொண்டிருக்கிறது.

அம்சங்கள்:

இதுதவிர புதிய ஹோண்டா காரில், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மற்றும் ஹோண்டா சென்சிங் சூட் மற்றும் ஆக்டிவ் சேப்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் லேன் சேன்ஜிங் அசிஸ்ட், பெடஸ்ட்ரியன் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன.

ஹோண்டா சிட்டி eHEV மாடல் 1.5 லிட்டர், அட்கின்சன் சைக்கிள் iVTEC பெட்ரோல் என்ஜின் மற்றும் லித்தியம் அயன் பேட்டரியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இது 124 பி.ஹெச்.பி. திறன், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. 

மைலேஜ்:

புதிய ஹோண்டா சிட்டி eHEV ஹைப்ரிட் மாடல் லிட்டருக்கு 26.5 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது என ஹோண்டா கார்ஸ் தெரிவித்து இருக்கிறது. ஹோண்டா eHEV எலெக்ட்ரிக் மோட்டார்கள் லித்தியம் அயன் பேட்டரியை ஒவ்வொரு முறை பிரேக்-ஐ அழுத்தும் போதும், பேட்டரியை ரிசார்ஜ் செய்கின்றன. 

இத்துடன் பேடில் ஷிஃப்டர்கள் உதவியுடன் பிரேக் எனர்ஜி மீட்பு சிஸ்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் லித்தியம் அயன் பேட்டரி யூனிட்டிற்கு ஹோண்டா நிறுவனம் எட்டு ஆண்டுகள் வரை வாரண்டி வழங்குகிறது.

click me!