160 கி.மீ. ரேன்ஜ்.. குறைந்த விலை ஹார்லி எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்...!

By Kevin Kaarki  |  First Published May 12, 2022, 3:28 PM IST

ஹார்லி S2 டெல் மார் LE அம்சங்கள் பற்றி முழு தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், இந்த மாடல் 80 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. 


ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பிரிவு லைவ்-வயர் S2 டெல் மார் LE எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்தது. புது எலெக்ட்ரிக் பைக் விலை 17 ஆயிரத்து 699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 13 லட்சத்து 67 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய S2 டெல் மார் LE பெயரில் LE என்பது லான்ச் எடிஷனை குறிக்கிறது.  

புதிய ஹார்லி டேவிட்சன் S2 டெல் மார் LE மாடல் லைவ்-வயர் ஒன் மாடலை விட அளவில் சிறியதாகவும், எடை குறைவாகவும், விலை குறைவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. லைவ்-வயர் ஒன் மாடல் விலை 22 ஆயிரத்து 799 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 17 லட்சத்து 61 ஆயிரம் ஆகும். இதுவரை புதிய S2 டெல் மார் LE மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வது பற்றி இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.

Tap to resize

Latest Videos

எலெக்ட்ரிக் பிளாட்பார்ம்:

புதிய S2 டெல் மார் LE மாடல் S2 ஏரோ ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் எலெக்ட்ரிக் மோட்டார், பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரானிக் சிஸ்டம்களை ஒற்றை யூனிட் ஆக கொண்டிருக்கிறது. ஏரோ ஆர்கிடெக்ச்சர் மாட்யுலர் டிசைன் கொண்டிருக்கிறது. மேலும் இது லைவ்-வயர் பிராண்டு அதிக எலெக்ட்ரிக் வாகன மாடல்களை உருவாக்க பிளாட்பார்ம் போன்று அமைகிறது.

S2 டெல் மார் LE அம்சங்கள் பற்றி முழு தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், இந்த மாடல் 80 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. மேலும் இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த பைக் வெளியீட்டைத் தொடர்ந்து அவ்வப் போது ஓவர் தி ஏர் முறையில் அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது.  டெல் மார் பேட்டரி ரேன்ஜ்-ஐ பொருத்தவரை முழு சார்ஜ் செய்தால் 160 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.

மினிமல் பாடி வொர்க் கொண்டு இருக்கும் லைவ்-வயர் S2 டெல் மார் LE மாடலில் செவ்வக வடிவம் கொண்ட எல்.இ.டி. ஹெட்லைட், இதன் மேல் ஃபிளை ஸ்கிரீன் மற்றும் பியுவல் டேன்க் வடிவ பேனல் பேட்டரி மற்றும் மோட்டார் யூனிட் மேல் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஜேஸ்பர் கிரே மற்றும் காமெட் இண்டிகோ நிறங்களில் கிடைக்கிறது.

click me!