ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் பயனர்கள் ஒவ்வொரு முறை தளத்திற்குள் உள்நுழையும்போதும் இதுபோன்ற தடை செய்யப்பட்ட பதிவுகளை வெளியிடக் கூடாது என்று எச்சரிக்கை வழங்க வேண்டும்.
ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள், ஆபாசமான அல்லது தவறான தகவல்களைப் பரப்பும் டீப்ஃபேக் பதிவுகளை பகிரக்கூடாது என தங்கள் பயனர்களுக்கு நினைவூட்டுமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது.
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட பதிவுகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி எடுக்கக்கிறது என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினின் வைஷ்ணவ் கூறுகிறார். டீப்ஃபேக் பதிவுகளைத் தடுப்பதற்கான விதிமுறைகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஒரு கூட்டத்தில் இது குறித்து தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கும், ஆபாசமான அல்லது வேறொரு நபரைப் போல் சித்தரிக்கும் படங்கள் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளன என்றும் அவை குறித்த விதிமுறைகளைத் தங்கள் பயன்பாட்டு விதிமுறைகளில் சேர்க்காதவர்கள் ஒரு வார காலத்திற்குள் சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
ஏர்டெல் யூஸ் பண்றீங்களா? நெட்பிளிக்ஸ் உங்களுக்கு ப்ரீ தான்... மிஸ் பண்ணாதீங்க...
ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் பயனர்கள் ஒவ்வொரு முறை தளத்திற்குள் உள்நுழையும்போதும் இதுபோன்ற தடை செய்யப்பட்ட பதிவுகளை வெளியிடக் கூடாது என்று எச்சரிக்கை வழங்க வேண்டும் என்றும் இவ்வாறு நினைவூட்டுவதன் மூலம் விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
முன்னதாக, அனைத்து சமூக வலைத்தளங்களும் அரசின் விதிகளுக்கு இணங்க பயன்பாட்டு விதிமுறைகளைச் சீரமைக்க ஒப்புக்கொண்டிருப்பாத அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சமீபத்தில் கூறினார். தடையை மீறி பகிரப்படும் பதிவுகள் குறித்த புகார்களுக்காக ஒரு தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.
இதற்காக நியமிக்கப்படும் பிரத்யேக அரதிகாரி டிஜிட்டல் தளங்களில் வரும் புகார்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பார். சட்ட மீறல்கள் குறித்து புகாரளிப்பது எளிதாக்க இருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பக்கா பேட்டரி... பவர்ஃபுல் பிராசஸர்... ரெனோ 11 சீரீஸ் மொபைல்களை களமிறக்கிய ஓப்போ!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும். Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D