டுவிட்டர் நிறுவனத்தில் நல்ல வேலை செய்யும் பணியாளர்கள் குறித்த விவரங்களை அந்தந்த மேலாளர்களிடம் எலான் மஸ்க் கேட்டறிந்தார். அதன் பிறகு, அவர் எடுத்த முடிவு அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
எலோன் மஸ்க் நிறுவனத்தின் புதிய வாரிசாக ஆனதிலிருந்து ட்விட்டரில் பல விஷயங்கள் தலைகீழாக மாறின. ஏராளமான ஊழியர்கள் வேலை இழந்தனர். அதன்பிறகு, இனி பணிநீக்கங்கள் நடைபெறாது என்று அறிவித்தார். இருப்பினும், பிப்ரவரி மாதத்தில் சில உயர்மட்ட மேலாளர்களை எலோன் மஸ்க் நீக்கினார். இந்த நிலையில், உயர்மட்ட அதிகாரிகள் எப்படி நீக்கப்பட்டனர் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
iNews என்ற தளத்தில் வெளிவந்த தகவலின்படி, டுவிட்டர் நிறுவனத்தில் பதவி உயர்வு நடைபெற உள்ளதாகவும், அதற்காக நல்ல வேலை செய்யும் பணியாளர்களை தேர்வு செய்து தருமாறும் அந்தந்த பிரிவு மேனேஜர்களிடம் எலான் மஸ்க் கேட்டுள்ளார். மேனேஜர்களும் நல்ல சிறப்பாக வேலை செய்பவர்களின் பட்டியலை அவரிடம் அளித்துள்ளனர்.
டுவிட்டரில் இனி 10 ஆயிரம் எழுத்துக்கள் வரையில் எழுதலாம்?
அப்போது தான் எலான் மஸ்க்கின் உண்மையான சுயரூபம் தெரியவந்தது. மேனேஜர்களை வேலையில் இருந்து நீக்கி விட்டு, அவர்களுக்கு பதிலாக, அவர்கள் பரிந்துரைத்த பணியாளர்களையே அந்த பொறுப்பில் வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக எஸ்தர் க்ராஃபோர்ட் என்பவர் அலுவலகத் தளத்தில் உறங்கும் படம் வெளியிட்டு சமூக ஊடகங்களில் பிரபலமடைந்தார். இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவெனில், அவரும் சிறந்த பணியாளரால் மாற்றப்பட்ட மேலாளர்களில் ஒருவர். இவ்வாறு எலான் மஸ்க் கிட்டத்தட்ட 50 மேலாளர்களை பணிநீக்கம் செய்ததாகவும், அவர்களுக்குப் பதிலாக சிறந்த செயல்திறன் கொண்ட ஊழியர்களை நியமித்துள்ளதாகவும் தெரிகிறது.
இதற்கு ஒரே காரணம் மேனஜர்கள் பெற்று வந்த அதிக சம்பளத்தைக் குறைப்பது தான் என்று கூறப்படுகிறது. இருப்பினும், அவர்களின் சம்பளம், அதற்கு முன் இருந்த மேனேஜர்களை விட அதிகமாக இல்லை. இன்னும் சொல்லப்போனால், குறைந்த சம்பளத்தில் நல்ல மேனேஜர்களை எலான் மஸ்க் நியமித்துள்ளார்.
ஸ்மார்ட்வாட்ச் வாங்க போறீங்களா? ரூ.1,500 முதல் ரூ.5,000 சிறந்த ஸ்மார்ட்வாட்சகள்!
குறைந்த ஊதியத்தில் வேலை செய்யத் தயாராக இருந்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம், செலவுகளைக் குறைத்து லாபத்தை அதிகரிக்க முடிந்தது. இதற்கு முந்தைய மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிக ஊதியம் பெறுகிறார்கள், அவர்களால் போதுமான பங்களிப்பை அளிக்க முடியவில்லை என்பது எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டு.