
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான முடிவை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் அறிவித்தது. மேலும், மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. 2016-ம் ஆண்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் இருந்ததைப் போல, நோட்டுகள் உடனடியாக நிறுத்தப்படாது என்றாலும், கரன்சி நோட்டுகளை மாற்ற வங்கிக்குச் செல்வது மிகவும் கடினமான பணியாக கருதப்படுகிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அமேசான் நிறுவனம் சமீபத்தில் ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, தனிநபர்கள் தங்களின் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். ஆம். மக்கள் அத்தொகையை தங்கள் வீட்டு வாசலிலேயே அமேசான் பே பணத்தில் சேர்க்க முடியும்.
WhatsAppல் உங்களுக்கு தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வருகிறதா.? இதோ வாட்ஸ்அப் கொடுத்த அப்டேட் !!
இதற்காக 'அமேசான் பே கேஷ் லோட் சிஸ்டம்’ என்ற வசதியை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் மக்கள் தங்கள் பணத்தை ரூ 2000 நோட்டுகளில் தங்கள் வீட்டு வாசலில் டெபாசிட் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் பே பேலன்ஸில் மாதத்திற்கு ரூ. 50,000 வரை செலுத்தி, ஆன்லைன் பர்ச்சேஸ்கள், ஸ்டோர்களில் ஸ்கேன் செய்து பணம் செலுத்துதல் அல்லது அமேசானில் ஷாப்பிங் செய்ய இந்த அமைப்பு அனுமதிக்கிறது. அமேசான் பே பயனர்கள் தங்கள் பணத்தை தங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றவும் அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பவும் அனுமதிக்கிறது.
அமேசான் பே பேலன்சில் ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்வது எப்படி?
இதற்கிடையில், 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாக புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ.2000 நோட்டுகளை வைத்திருக்கும் நபர்கள், எந்த வங்கியிலும் அவற்றை மாற்றிக்கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம். செப்டம்பர் 30, 2023 வரை மட்டுமே 2000 ரூபாய் நோட்டை மாற்ற முடியும். இருப்பினும், செப்டெம்பர் 30-ம் தேதிக்குப் பிறகும் ரூ.2000 நோட்டு, சட்டப்பூர்வமான டெண்டராக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
ஒரே மொபைலில் பல அக்கவுண்ட்! வாட்ஸ்அப்பில் விரைவில் வருகிறது புதிய அப்டேட்
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.