புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் ஏராளமான மாற்றங்களுடன், முற்றிலும் புது டிசைன் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
மஹிந்திரா நிறுவன கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை மே மாதம் முழுக்க வழங்கப்பட இருக்கின்றன. இவை கேஷ் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இலவச அக்சஸரீக்கள் வடிவில் வழங்கப்படுகின்றன.
அதன் படி மஹிந்திரா அல்டுராஸ் G4 மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் வரையிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகிறது. மஹிந்திரா XUV300 மாடலுக்கு ரூ. 7 ஆயிரத்து 500, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ. 10 ஆயிரம் வரையிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.
மஹிந்திரா மராசோ:
மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரத்து 200 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஸ்கார்பியோ மாடலை வாங்குவோர் ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் வரையிலான கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ. 13 ஆயிரம் வரையிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.
மஹிந்திரா பொலிரோ நியோ மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்பரேட் தள்ளுபடி, ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா XUV700 மற்றும் தார் மாடல்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. முன்னதாக இந்த மாடல்களின் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி ரூ. 78 ஆயிரத்து 311 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய ஸ்கார்பியோ:
மே மாத சலுகைகள் மட்டும் இன்றி மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் ஏராளமான மாற்றங்களுடன், முற்றிலும் புது டிசைன் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. முன்னதாக மஹிந்திரா நிறுவனம் இந்த மாட லுக்கான டீசரையும் வெளியிட்டு இருக்கிறது.