சிட்ரோயன் நிறுவனம் தற்போது C3 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய சிட்ரோயன் C3 மாடல் இந்திய சந்தையில் டாடா பன்ச் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது கார் மாடல் 2022 C3 எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய சிட்ரோயன் C3 மாடல் அடுத்த மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக 2020 வாக்கில் சிட்ரோயன் நிறுவனம் C5 ஏர்கிராஸ் எஸ்.யு.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது.
அந்த வரிசையில், சிட்ரோயன் நிறுவனம் தற்போது C3 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய சிட்ரோயன் C3 மாடல் இந்திய சந்தையில் டாடா பன்ச் மாடலுக்கு போட்டியாக அமைகிறது. முன்னதாக சிட்ரோயன் C3 எஸ்.யு.வி. மாடல் சென்னை அருகில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.
முன்பதிவு விவரம்:
சிட்ரோயன் C3 எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவுகள் இம்மாத இறுதியில் துவங்கும் என தெரிகிறது. சிட்ரோயன் நிறுவனம் C3 மாடலை ஏற்கனவே இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் இந்தியர்களுக்காக இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மாடல் என சிட்ரோயன் அறிவித்து இருந்தது. சிட்ரோயன் C3 எஸ்.யு.வி. மாடலில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் மற்றும் எல்.இ.டி. ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் பம்ப்பர் C5 ஏர்கிராஸ் மாடலில் உள்ளதை விட வித்தியாசமானதாக காட்சி அளிக்கிறது. இத்துடன் ஃபிளான்க் செய்யப்பட்ட பாக்லேம்ப் கேசிங் வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டு பகுதிகளும் வித்தியாசமாக காட்சி அளிக்கிறது. இந்த மாடலில் பாடி நிறத்தால் ஆன ORVMகள் வழங்கப்படவில்லை. பின்புறம் மினிமலிஸ்ட் தோற்றம், புதிய டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
என்ஜின் விவரங்கள்:
புதிய சிட்ரோயன் C3 மாடல் 1.2 லிட்டர் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேசிலில் உற்பத்தி செய்யப்பட்ட 2022 சிட்ரோயன் C3 மாடல், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின், 1.6 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அர்ஜெண்டினாவில் 2022 சிட்ரோயன் C3 மாடல் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 82 ஹெச்.பி. பவர், 118 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.