நான்கு மாதங்களில் இத்தனை யூனிட்களா? விற்பனையில் அசத்தும் பல்சர் 250 சீரிஸ்..!

By Kevin Kaarki  |  First Published May 4, 2022, 3:45 PM IST

கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர்  N250 மற்றும் பஜாஜ் பல்சர் F250 மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது.


பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பஜாஜ் பல்சர் N250 மற்றும் பஜாஜ் பல்சர் F250 மோட்டார்சைக்கிள் மாடல்கள் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளதாக அறிவித்து இறுக்கிறது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இரு மாடல்களை சேர்த்து சுமார் 10 ஆயிரம் யூனிட்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர்  N250 மற்றும் பஜாஜ் பல்சர் F250 மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. இவை பஜாஜ் பல்சர் சீரிசில் சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள் மாடல்கள் ஆகும். இரு மாடல்களிலும் 2590சிசி  என்ஜின் வழங்கப்பட்டுள்ளன. புதிய பஜாஜ் பல்சர் N250 மற்றும் பஜாஜ் பல்சர் F250 மாடல்கள் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளன. 

Tap to resize

Latest Videos

இந்திய சந்தையில் புதிய பஜாஜ் பல்சர் N250 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 680 என்றும் பஜாஜ் பல்சர் F250 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 979 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  புதிய பஜாஜ் பல்சர் 250 சீரிஸ் மாடல்கள்- டெக்னோ கிரே, ரேசிங் ரெட் மற்றும் கரீபியன் புளூ நிறங்களில் கிடைக்கின்றன.+

என்ஜின் விவரங்கள்

புதிய பஜாஜ் பல்சர் N250 மற்றும் பஜாஜ் பல்சர் F250 மாடல்களில் 249சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்டு 2 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளன. இந்த என்ஜின் 24.1 பி.ஹெச்.பி. பவர், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது. பல்சர் 250 டுவின் மாடல்கள் டியுபுலர் ஸ்டீல் பிரேம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

இத்துடன் 37mm டெலிஸ்கோபிக் முன்புற போர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 17 இன்ச் வீல்கள், 130mm டையர், 100mm முன்புற டையர் வழங்கப்பட்டுள்ளன. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 165mm அளவில் உள்ளது. புதிய பஜாஜ் பல்சர் N250 மாடலின் எடை 162 கிலோ ஆகும். பஜாஜ் பல்சர் F250 எடை 164 கிலோ ஆகும். 

நம்பிக்கை:

"முற்றிலும் புதிய பஜாஜ் பல்சர் 250 சீரிஸ் மாடல்கள் தினசரி பயன்பாட்டில் கலப்படம் இல்லா திரில் வழங்கும் ஒற்றை நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டில் வசிக்கும் இளம் ரைடர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பு எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய சூழ்நிலைகளில் பல்சர் 250 சரியான எண்ட்ரி லெவல் ஸ்போர்ட் மாடல் என்பதை விளக்கும் வகையில் நாடு முழுக்க திரில்-ஒலோஜி ரைடுகளை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். இந்த விற்பனை மைல்கல் வாடிக்கையாளர்கள் பல்சர் பிராண்டு மீது வைத்து இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையிலும், ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு அதிகரித்து வரும் தட்டுப்பாடு உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தி இருக்கிறது,"  என பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் வியாபார பிரிவு தலைவர் சரங் கனடே தெரிவித்தார்.  

click me!