வேற லெவல் லுக் - அவின்யா EV கான்செப்ட் அறிமுகம்... டாடா மோட்டார்ஸ் அதிரடி

By Kevin Kaarki  |  First Published Apr 30, 2022, 3:45 PM IST

காரின் முன்புறம் மற்றும் பின்புறங்களில் எல்.இ.டி. பார் உள்ளது. எல்.இ.டி. பாரின் நடுவில் T எனும் வார்த்தை அட்டகாசமாக காட்சி அளிக்கிறது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது புதிய எலெக்ட்ரிக் வாகனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி முற்றிலும் புதிய அவின்யா எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கான்செப்ட் மாடல் விவரங்களை  அறிவித்து இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் "Gen 3" பிளாட்பார்மில் உருவாக்கப்பட இருக்கிறது. புதிய "பியுர் EV Gen 3" பிளாட்பார்ம் பல்வேறு EV பாடி ஸ்டைல்கள், எஸ்.யு.வி. மற்றும் கிராஸ் ஓவர் என பல்வேறு மாடல்களை கொண்டிருக்கும். 

அவின்யா கான்செப்ட்- இன் முதல் ப்ரோடக்‌ஷன் மாடலை 2025 வாக்கில் சாலைகளில் பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அவின்யா கான்செப்ட் மாடலுடன் TPEML-இன் புதிய பிராண்டு லோகோ இடம்பெற்று இருக்கிறது. அதன் படி காரின் முன்புறம் மற்றும் பின்புறங்களில் எல்.இ.டி. பார் உள்ளது. எல்.இ.டி. பாரின் நடுவில் T எனும் வார்த்தை அட்டகாசமாக காட்சி அளிக்கிறது.

Tap to resize

Latest Videos

ஆடி கான்செப்ட்:

டிசைனை பொருத்தவரை புதிய கான்செப்ட் மாடல் வித்தியாசமாகவும், எஸ்.யு.வி. மற்றும் எம்.பி.வி. பாடி ஸ்டைல்களை இணைந்து உருவாக்கப்பட்டதை போன்று காட்சியளிக்கிறது. இதேபேன்ற டிசைன் சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஆடி அர்பன்ஸ்பியர் கான்செப்ட் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. 2030 ஆண்டிற்குள் அனைத்து பிரிவுகளிலும் EV மாடல்களை வெளியிட ஆடி நிறுவனத்தை போன்றே டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் 3-பிளாட்பார்ம் யுக்தியை கையாள இருக்கிறது. 

 

லான்ஜ் இண்டீரியர்:

புதிய டாடா அவின்யா கான்செப்ட் மாடல் 4300 மில்லிமீட்டர் நீளமாக இருக்கிறது. இதன் ப்ரோடக்‌ஷன் மாடல் அளவீடுகளில் நிச்சயம் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம். புதிய கான்செப்ட் மாடல் உள்புறம் லான்ஜ் போன்ற அனுபவத்தை வழங்கும் இண்டீரியர் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் கான்செப்ட் மாடல் பட்டர்ஃபிளை கதவுகளை கொண்டிருக்கிறது. 

புதிய அவின்யா கான்செப்ட் மாடலில், அவின்யா என்ற வார்த்தைக்கு சமஸ்கிருத மொழியில் புதுமை என்று பொருள்படும். இந்த கான்செப்ட் மாலில் பல்வேறு முதல் முறை அம்சங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் இந்த கான்செப்ட் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புது டிசைன் மொழியை பிரதிபலிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது.  இந்த கான்செப்ட் மாடல் பியூர் EV Gen 3 தொழில்நுட்பத்தை சார்ந்து உருவாக்கப்பட இருக்கிறது. இந்த காரை DC பாஸ்ட் சார்ஜர் கொண்டு 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்ல முடியும்.

click me!