இந்த சலுகைக்கு மாறுவோர் அல்லது அப்கிரேடு செய்வோருக்கு நெட்ப்ளிக்ஸ் பேசிக் சந்தா வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 199 ஆகும்.
ஏர்டெல் நிறுவனம் தனது எக்ஸ்-ஸ்டிரீம் பைபர் பிராட்பேண்ட் சலுகைகளுடன் நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகைகளுடன் நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுவது முதல் முறை ஆகும்.
அதன் படி ஏர்டெல் புரோஃபஷனல் மற்றும் இன்பிணிட்டி பிராட்பேண்ட் சலுகைகளுடன் நெட்ப்ளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. பிராட்பேண்ட் சந்தையில் போட்டி நிறுவன சலுகைகளை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிவித்து உள்ளது.
ஏர்டெல் புரோபஷனல் சலுகை விலை மாதம் ரூ. 1,498 ஆகும். இந்த சலுகைக்கு மாறுவோர் அல்லது அப்கிரேடு செய்வோருக்கு நெட்ப்ளிக்ஸ் பேசிக் சந்தா வழங்கப்படும். இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் பேசிக் சந்தா கட்டணம் மாதம் ரூ. 199 ஆகும். இந்த சந்தாவில் 480 பிக்சல் தரத்திலான தரவுகளை ஒரு ஸ்கிரீனில் பார்க்க முடியும். ஏர்டெல் புரோபஷனல் சலுகையில் அன்லிமிடெட் டேட்டா, 300Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.
இதர பலன்கள்:
புதிதாக நெட்ப்ளிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மட்டும் இன்றி அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் போன்ற சேவைகளுக்கான சந்தாவும் வழங்குகிறது. மற்றொரு பிராட்பேண்ட் சலுகையான ஏர்டெல் இன்பினிட்டிக்கு அப்கிரேடு அல்லது மாறும் பயனர்களுக்கு நெட்ப்ளிக்ஸ் பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.
ஏர்டெல் இன்பினிட்டி சலுகை கட்டணம் ரூ. 3 ஆயிரத்து 999 ஆகும். இது தவிர நெட்ப்ளிக்ஸ் பிரீமியம் சந்தாவுக்கான மாத கட்டணம் ரூ. 649 ஆகும். ஏர்டெல் இன்பினிட்டி சலுகையில் அன்லிமிடெட் டேட்டா 1Gbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இத்துடன் அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்ப்ளிக்ஸ் பிரீமியம், எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் மற்றும் பல்வேறு இதர சலுகைகள் வழங்கப்படுகிறது.
பயன்பெறுவது எப்படி:
ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகைகளுடன் வழங்கப்படும் நெட்ப்ளிக்ஸ் சந்தாவை ஆக்டிவேட் செய்ய, ஏர்டெல் தேங்ஸ் செயலியின் கீழ்புறம் ஸ்கிரால் செய்து என்ஜாய் யுவர் ரிவார்ட்ஸ் -- டிஸ்கவர் தேங்ஸ் பெனிஃபிட் -- ஆப்ஷனில் உள்ள நெட்ப்ளிக்ஸ் ஐகானை கிளிக் செய்து -- கிளைம் -- புரோசீட் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.