கடந்த 3 நாட்களில் 40 வங்கி வாடிக்கையாளர்கள் இடையே லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
5ஜி காலகட்டத்தில் அனைத்துமே இணையம் வழியாகவே செயல்படுகிறது. வீடியோ கால், பேங்கிங், உணவு டெலிவரி முதல் டேட்டிங் வரை அனைத்தும் இணையத்தால் சாத்தியம் ஆகியிருக்கிறது.
பல்வேறு துறைகள் வளர்ச்சியடைந்துள்ளன. இருப்பினும் நவீன டெக்னலாஜியால் பல சிக்கல்களும் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கிறது. தவறாகப் பயன்படுத்தும் சிலர், எதுவும் தெரியாத அப்பாவி மக்களைக் குறிவைத்து சைபர் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.
undefined
இதனால் மக்கள் பல லட்ச ரூபாய் வரை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது. வங்கி அதிகாரிகள் போல் காட்டி மோசடி செய்பவர்களின் போலி இணைப்புகளை கிளிக் செய்த 3 நாட்களில் வாடிக்கையாளர்கள் பல லட்சம் ரூபாய் இழந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் வங்கி ஒன்றின் 40 வாடிக்கையாளர்களிடம் மூன்றே நாட்களில் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டதால், மும்பையில் சைபர் கிரைம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. மோசடி செய்பவர்கள் KYC ஐ பான் கார்டுடன் புதுப்பிப்பதற்கான போலி இணைப்புகளை அனுப்பிய பின்னர், இச்சம்பவம் வெளியே வந்துள்ளது.
அப்பாவி மக்கள் அதை ஒரு உண்மையான செய்தி என்று நினைத்து அதைக் கிளிக் செய்ததாக கூறப்படுகிறது. ஊழல் புகார் அளித்த 40 பாதிக்கப்பட்டவர்களில் தொலைக்காட்சி நடிகை ஸ்வேதா மேனன் ஒருவர் ஆவார். மோசடியான குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பை தனது வங்கியில் இருந்து வந்ததாக நினைத்து கிளிக் செய்ததாக மேமன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க..Kushboo: 8 வயதில் பாலியல் தொல்லை கொடுத்தார் என் தந்தை.. நடிகை குஷ்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்
அந்த குறிப்பிட்ட போலியான தளத்தைத் திறந்த பிறகு ஐடி, கடவுச்சொற்கள் (பாஸ்வேர்ட்) மற்றும் OTP ஆகியவற்றை பதிவிட்டார். வங்கி அதிகாரி போல் நடிக்கும் ஒரு பெண்ணிடமிருந்து பிறகு தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அவர் தனது மொபைல் எண்ணில் பெற்ற மற்றொரு OTP ஐ சொல்லுமாறு கேட்டதாகவும் அவர் மேலும் கூறினார். அதன் பிறகு, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.57,636 டெபிட் செய்யப்பட்டது.
மும்பை காவல்துறை வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஆலோசனையை வழங்கியுள்ளது. ரகசியத் தகவலைக் கேட்கும் எந்தவொரு இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று மக்களை எச்சரித்துள்ளது. மோசடி செய்பவர்கள், தங்கள் கேஒய்சி / பான் கார்டு விவரங்களைப் புதுப்பிக்கத் தவறியதால், அவர்களின் வங்கிக் கணக்கு தடுக்கப்பட்டதாகக் கூறி, ஃபிஷிங் இணைப்புகளுடன் இதுபோன்ற தவறான எஸ்எம்எஸ்களை பயனர்களுக்கு அனுப்புகிறார்கள்.
இந்த இணைப்புகள் (URL), தங்கள் வாடிக்கையாளர் ஐடி, கடவுச்சொல் மற்றும் பிற ரகசியத் தகவல்களின் விவரங்களைக் கொடுக்குமாறு கேட்கப்படும் போலியான வங்கி இணையதளத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லலாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க..பெண்களுக்கு மாதம் "ஆயிரம் ரூபாய்" திட்டத்தை தொடங்கி வைத்தார் ம.பி முதல்வர் - தமிழ்நாட்டில் எப்போது தெரியுமா.?