23 கி.மீ. மைலேஜ்.. ரூ. 55 லட்சம் துவக்க விலை... 2022 C கிளாஸ் மாடலை அறிமுகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்..!

By Kevin Kaarki  |  First Published May 10, 2022, 2:13 PM IST

முன்னதாக 2022 மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் மாடல் கடந்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.


மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் புதிய தலைமுறை C கிளாஸ் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் மாடல் விலை ரூ. 55 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 61 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

2001 ஆம் ஆண்டு முதல் C கிளாஸ் மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை மாடல் ஆகும். முன்னதாக இந்த மாடல் கடந்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதுவரை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 37 ஆயிரம் C கிளாஸ் மாடல்களை விற்பனை செய்து இருக்கிறது.

Tap to resize

Latest Videos

மகாராஷ்டிரா மாநிலத்தின் சக்கன் பகுதியில் இயங்கி வரும் மெர்சிடிஸ் பென்ஸ் உற்பத்தி ஆலையில் இந்த மாடல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. புதிய C கிளாஸ் மாடலுக்கான முன்பதிவுகளும் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. 

என்ஜின் விவரங்கள்:

புதிய 2022 மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் மாடலில் - 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் டீசல் என்ஜின்கள் இருவித டியுனிங்கில் வழங்கப்படுகிறது. மூன்று என்ஜின்களுடன் இண்டகிரேடெட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் மற்றும் EQ பூஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை 15 ஹெச்.பி. அதிக திறன் மற்ரும் 200 நியூட்டன் மீட்டர்கள் அதிக இழுவிசையை வெளிப்படுத்த செய்யும். 

இதன் C220d மாடல் லிட்டருக்கு 23 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா தெரிவித்து இருக்கிறது. C200 பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.9 கிலோமீட்டர், C300d மாடல்லிட்டருக்கு 20.37 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகின்றன.

புதிய பென்ஸ் C200 பெட்ரோல் மாடலில் 1496சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 பி.ஹெச்.பி. பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 9G-டிரானிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 16.9 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. மேலும் இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும்.

மெர்சிடிஸ் பென்ஸ் C220d மாடலில் 1993சிசி டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 197 பி.ஹெச்.பி. பவர், 440 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 9G-டிரானிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 23 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. மேலும் இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும்.

2022 பென்ஸ் C 300d மாடலிலும் 1993சிசி டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 261 பி.ஹெச்.பி. பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 9G-டிரானிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 20.37 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. மேலும் இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.7 நொடிகளில் எட்டிவிடும்.

மற்ற அம்சங்கள்:

2022 மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ்  AMG லைன் ஸ்போர்ட் கிரில், வித்தியாசமான அலாய் வீல் டிசைன்களை கொண்டுள்ளது. இதன் C200 மற்றும் C220d வேரியண்ட்கள்- சலண்டைன் கிரே, மோஜேவ் சில்வர், ஹை-டெக் சில்வர், மனுஃபக்துர் ஆப்டேல் வைட், கேவன்சைட் புளூ மற்றும் அப்சிடியன் பிளாக் நிறங்களில் கிடைக்கின்றன. மெர்சிடிஸ் பென்ஸ் C300d வேரியண்ட் மனுஃபக்துர் ஆப்டேல் வைட், கேவன்சைட் புளூ மற்றும் அப்சிடியன் பிளாக் என மூன்று நிறங்களில் மட்டும் கிடைக்கிறது.

click me!