சர்வதேச மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்களுடன் 2022 கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2022 கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. புதிய ஸ்போர்ட் பைக் மாடல் விலை ரூ. 3 லட்சத்து 14 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 36 ஆயிரம் அதிகம் ஆகும். மேம்பட்ட மாடலில் புது ஸ்டைலிங் மற்றும் அதிக செயல்திறன் வழங்கப்பட்டு இருக்கிறது.
2022 கே.டி.எம். RC390 மாடலில் ஏராளமான ஸ்டைலிங் அப்டேட்கள் செய்யப்பட்டு உள்ளன. முன்புறம் முற்றிலும் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடலில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கே.டி.எம். RC200 ஸ்போர்ட் பைக் மாடலில் இருந்ததை போன்ற டிசைன் அம்சங்களை கொண்டுள்ளது. இத்துடன் இந்த மாடல் முற்றிலும் புது நிறத்தில் கிடைக்கிறது.
மேம்பட்ட ஸ்டைலிங்:
இதில் 13.7 லிட்டர் பியூவல் டேன்க், ரி-டிசைன் செய்யப்பட்ட டெயில் பகுதி, சைடு ஸ்லங் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய கே.டி.எம். RC390 மாடலில் அதன் சர்வதேச வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கும் சில அம்சங்களும் இந்திய வேரியண்டில் வழங்கப்பட்டு உள்ளது. இதில் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், கார்னரிங் ஏ.பி.எஸ்., குயிக்ஷிப்டர், TFT டிஸ்ப்ளே, ஸ்விட்ச் கியர் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.
என்ஜின் விவரங்கள்:
புதிய 2022 கே.டி.எம். RC390 மாடலில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் 373சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் தற்போதைய மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. செயல்திறனை பொருத்தவரை இந்த என்ஜின் 42.9 ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்திய சந்தையில் புதிய 2022 கே.டி.எம். RC390 மோட்டார்சைக்கிள் கவாசகி நின்ஜா 300 மற்றும் டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர். 310 பி.எஸ்.6 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.