ஆகமத்தில் யார் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அர்ச்சகர் ஆகலாம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி - முழு விபரம்

By Raghupati R  |  First Published Jun 26, 2023, 4:40 PM IST

ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் அர்ச்சகர் ஆகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.


சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். 

இதை எதிர்த்து அதே கோயில் பணிபுரிந்துவந்த சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சுகனேஸ்வர் கோயிலில் ஆகமத்தின் அடிப்படை ஆனது, இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதிகள், ஆகமத்தின் அடிப்படை இல்லை என்று கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது.

Tap to resize

Latest Videos

மக்களே உஷார்.! இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கை தீர்ப்புக்காக ஏற்கனவே ஒத்திவைத்திருந்தார். இந்த வழக்கில், இன்று பிறப்பித்த தீர்ப்பில், ஆகம விதிகளைக் கடைபிடிக்கும் கோயில்களின் தலைமை அர்ச்சகர்கள் அளிக்கும் தகுதிச்சான்றின் அடிப்படையில் கோயில்களில் காலியாக உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்களை நியமிக்கும் அரசின் சட்டத்தை ஏற்று நீதிபதி உத்தரவிட்டார்.

கோயில்களின் ஆகமத்தை கண்டறிய அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்க வேண்டியது இல்லை. குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்களை அர்ச்சகராக நியமிக்கலாம். அந்தந்த கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்று பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டார்.

From the India Gate: நான் ரெடி.! 2026 தேர்தலுக்கு குறி வைக்கும் No.1 நடிகர்.. கலக்கத்தில் தலைவர்கள்

click me!