விஸ்வரூபமெடுக்கும் கொரோனா... தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்..? முதல்வர் இன்று ஆலோசனை !

By Raghupati R  |  First Published Jan 10, 2022, 8:45 AM IST

இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அதே போல ஒமிக்ரான் பரவலும் மிக வேகமாக பரவி வருகிறது.  இதனால் இரவு நேர ஊரடங்கு,  ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் ஆகியவை தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

அதன்படி, ஏற்கனவே இதுகுறித்து முதல்வர் அவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகம் முழுவது, இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில்,  தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்ட உயர் மருத்துவ அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளது.

click me!