திருச்சியில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ஓனருக்கு வலைவீசிய போலீஸ் - சிக்கிய விஜய் மக்கள் மன்ற நிர்வாகி!

By Ansgar R  |  First Published Jul 29, 2023, 3:46 PM IST

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில், திண்டுக்கல் செல்லும் பாதையில் அமைந்திருப்பது தான் கருமண்டபம் என்ற பகுதி.


இந்நிலையில் இந்த பகுதியில் பல ஆண்டுகளாக விபச்சாரம் நடந்து வருவதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனை அடுத்து அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கருமண்டபம் சிங்கராயர் நகரில் உள்ள தி ஷைன் என்ற ஸ்பாவில் சோதனை நடத்தினர். 

ஆனால் ஒரு ஸ்பா நடத்துவதற்கான உரிமம் எதுவுமே இல்லாமல், அங்கு அந்த நிறுவனம் செயல்பட்டு வந்ததும், ஸ்பா என்ற பெயரில் அங்கு விபச்சாரம் நடந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த லட்சுமிதேவி என்ற நிறுவன மேலாளரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். 

Tap to resize

Latest Videos

சிறுவர்களை தூண்டிவட்டு கல்லா கட்டிய இரும்புக்கடை உரிமையாளர்; ரூ.10 லட்சம் உதிரி பாகம் திருட்டு

மேலும் அங்கிருந்து இரண்டு பெண்களும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர், லட்சுமி தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருச்சி வயலூர் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் தான் இந்த நிறுவனத்தின் முதலாளி என்றும், அவர்தான் அனைத்திற்கும் காரணம் என்றும் தெரியவந்தது. 

தனது நிறுவனம் போலீசாரால் சீல் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்த செந்தில், கடந்த ஒரு வார காலமாக தலைமறைவாக இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று அந்த ஸ்பா நிறுவன ஓனர் செந்தில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் விஜய் மக்கள் மன்ற நிர்வாகி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தற்பொழுது செந்தில் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ச்சியாக விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல.. பாவ யாத்திரை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

click me!