தமிழக மீனவர்கள் 33 பேர் கைது; இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - தினகரன்

By Velmurugan sFirst Published Aug 10, 2024, 1:11 AM IST
Highlights

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து 4 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 33 பேரை எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதி தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தை பதிவு செய்த பின்னரும் இலங்கை கடற்படையினரின் அராஜகப் போக்கு தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது.

Latest Videos

9ம் வகுப்பில் ரொமேன்ஸ்; காதலிக்கு ஐபோன் வாங்க தாயின் நகையை திருடிய மாணவன்

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது என ஒரு புறம் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலும், இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் மற்றொரு புறமும் தொடர்கதையாகி வருவது மீனவ சமுதாயத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆணவப்படுகொலை என்பது வன்முறை இல்ல; அக்கறை தான் சாமி - ரஞ்சித் விளக்கம்

எனவே, தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதோடு, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் மீட்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!