நாளை தமிழகத்தின் முக்கிய நாள்…. ஏற்பாடுகளில் களம் இறங்கிய அதிகாரிகள்

By manimegalai aFirst Published Oct 9, 2021, 8:26 AM IST
Highlights

தமிழகத்தில் நாளை கொரோனா மெகா தடுப்பூசி முகாமுக்கான ஏற்பாடுகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் களம் இறங்கி உள்ளனர்.

சென்னை: தமிழகத்தில் நாளை கொரோனா மெகா தடுப்பூசி முகாமுக்கான ஏற்பாடுகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் களம் இறங்கி உள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட 4 முகாம்களில் ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

செப்டம்பர் 12ம் தேதி நடைபெற்ற முதல் முகாமில் 28.91 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 19ம் தேதி நடைபெற்ற முகாமில் 16.43 லட்சம் பேர், 26ம் தேதி 25.04 லட்சம் பேர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.

இந் நிலையில் தமிழகம் முழுவதும் நாளை 5ம் கட்டமாக கொரோனா மெகா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நடக்க உள்ளது. இந்த முகாமில் 33 லட்சம் பேருக்கு ஊசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 1600 மெகா சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன. நாளை நடக்க இருக்கும் சிறப்பு முகாம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

click me!