Weather Update: கொட்டி தீர்க்கப் போகும் மழை..எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழை..? - வானிலை மையம்

Published : Mar 02, 2022, 03:24 PM IST
Weather Update: கொட்டி தீர்க்கப் போகும் மழை..எந்தெந்த மாவட்டங்களில் அதி கனமழை..? - வானிலை மையம்

சுருக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் அதிகனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 4-ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது  

இதுதொடர்பான வானிலை மையத்தின் அறிவிப்பில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி மற்றும் பூமித்திய ரேகை ஓட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும்; காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றபின் இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணாமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் 

நாளை, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமாக மழை பெய்யும். நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிடு இடங்களில் கன முதல் கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மார்ச் 4 ஆம் தேதி, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும். கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழை பெய்யும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேச்சை, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளன.

05.03.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேச்சை, செங்கல்பட்டு மாவட்டஙளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, வேலூர், திருப்பத்தூட், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,கடலூர், புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளன.

06.03.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யுக்கூடும். தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளன. சென்னையை பொருத்தவரை  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்