அப்படியே… மெல்ல எட்டி பார்க்கும் கொரோனா.. தமிழகத்தின் இன்றைய ‘ஷாக்’ பாதிப்பு

By manimegalai a  |  First Published Sep 22, 2021, 8:33 PM IST

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றுக்கு 1682 பேர் ஆளாகி உள்ளனர்.


சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றுக்கு 1682 பேர் ஆளாகி உள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு பற்றிய விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டு உள்ள விவரம் வருமாறு:

தமிழகத்தில் இன்று மட்டும் 1682 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது இதன் மூலம் ஒட்டு மொத்த பாதிப்பு 26, 50, 370 ஆக இருக்கிறது.

 சென்னையில் இன்று 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது நேற்றைய நிலவரத்தை விட சற்று குறைவாகும். கோவையில் 235 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

இன்று மட்டும் 21 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். அவர்களுடன் சேர்த்து ஒட்டு மொத்தமாக 35,400 பேர் உயிரிழந்து உள்ளனர். 1627 பேர் குணம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். இன்னமும் மாநிலம் முழுவதும் 17,027 பேர் கொரோனா சிகிச்சையில் இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

click me!