தமிழகத்தில் 1170 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: தமிழகத்தில் 1170 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
undefined
தமிழக சுகாதாரத்துறையானது கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நிலவரங்களை வெளியிட்டு உள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:
தமிழகத்தில் இன்று 1170 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த பாதிப்பு 26,90,633 ஆக உள்ளது.
24 மணி நேரத்தில் 20 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து ஒட்டு மொத்த உயிரிழப்பு 35,948 ஆக இருக்கிறது. 1418 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
இதுவரை 26,40,627 போ குணமாகி உள்ளனர். இன்னமும் 14,058 கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.