இன்றும் இறங்கிய கொரோனா பாதிப்பு… இதோ லேட்டஸ்ட் தகவல்

By manimegalai aFirst Published Oct 9, 2021, 8:06 PM IST
Highlights

தமிழகத்தில் இன்று 1344 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை: தமிழகத்தில் இன்று 1344 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சுகாதாரத்துறையானது நாள்தோறும் பதிவாகும் கொரோனா தொற்று விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய நிலவரங்களை வெளியிட்டு உள்ளது.

அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் இன்று 1344 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஒட்டு மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 26,76,936 ஆக உள்ளது.

24 மணி நேரத்தில் 14 பேர் கொரோனாவால் மாண்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக 35,768 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். 1457 பேர் குணமானாலும் 16,252 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒட்டு மொத்தமாக 26,24,916 பேர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக விடுபட்டுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை செய்திக் குறிப்பில் வெளியிட்டு உள்ளது.

 

click me!