தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
undefined
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பின் விவரம் வருமாறு:
தமிழகத்தில் 1245 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 26,84,641 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் ஒரே நாளில் 1442 பேர் குணம் பெற்றுள்ளனர். 16 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 35,869 ஆக பதிவாகி உள்ளது.
தலைநகர் சென்னையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் 139 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. ஈரோட்டில் 91, திருப்பூர் 71, தஞ்சை மற்றும் திருவள்ளூரில் தலா 59, சேலத்தில் 54 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.