தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1259 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1259 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது.
undefined
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி பணிகள் வேகப்படுத்தப்பட்டதும் அதற்கு முக்கிய காரணமாகும்.
இந் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1259 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று 1289 ஆக பாதிப்பு பதிவானது. ஒட்டு மொத்தமாக 1,37,423 பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது.
ஒரே நாளில் 20 பேர் கொரோனாவால் பலியாகி இருக்கின்றனர். அவர்களில் 12 பேர் அரசு மருத்துவமனையிலும், 8 பேரும் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 35,853 ஆக உயர்ந்துள்ளது.
1438 பேர் ஒரே நாளில் கொரோனா சிகிச்சையில் குணம் பெற்றுள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 26,32,092 ஆக இருக்கிறது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.