திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புகழ்பெற்ற திருவண்ணாமலையில் மாதம்தோறும் பவுர்ணமி நாளன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால் இம்முறை பவுணர்மி நாளில் கிரிவலம் செல்ல திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பிறப்பித்து உத்தரவு வருமாறு: தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அக்டோபர் 19ம் தேதி காலை 6 மணி முதல் அக்டோபர் 21ம் தேதி இரவு 12 மணி வரை கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆட்சியர் அறிவிப்பால் மாதம்தோறும் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அண்மையில் கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி தந்தது. அதுபோல் கிரிவலம் செல்லவும் மாநில அரசு அனுமதி தர வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.