நீங்களா பார்த்து திருந்தலனா! மக்களால் திருத்தப்படுவீர்கள்! MGR பாடலை சுட்டிக்காட்டி திமுகவை விளாசிய திலகபாமா!

By vinoth kumar  |  First Published Jun 17, 2024, 3:57 PM IST

மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்கிறேன் என்று கூறி மக்களின் கையைப் பிடித்து முன்னே நடக்க வைத்து விட்டு சம்பட்டி கொண்டு இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை பின்னே அடித்து நொறுக்குறது தமிழக அரசு. 


நாடளுமன்றத் தேர்தல் வந்தது உடனே மக்களுக்கு துணையாக நிற்கும் கட்சி போல நரி வேடம் அணிந்து வெற்றி பெற்றவுடன் தற்போது மீண்டும் அதே பழைய கதையான தொழிற்பேட்டை அமைப்பதில் வந்து நிற்கிறது  தந்திரமான அரசு என திலகபாமா கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக பாமக மாநில பொருளாளர் திலகபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில்: மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்கிறேன் என்று கூறி மக்களின் கையைப் பிடித்து முன்னே நடக்க வைத்து விட்டு சம்பட்டி கொண்டு இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை பின்னே அடித்து நொறுக்குறது தமிழக அரசு. விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்து பல செயல்களை செய்து கொண்டே இருக்கிறது. மக்களுக்காக போராடும் பாட்டாளி கட்சிகள் எத்தனையோ போராட்டங்கள் நடத்தி எதிர்ப்புகளை கொடுத்தாலும் எங்களின் முடிவு படி தான் நடப்போம் மற்றவர்களுக்காக மாற்றம் செய்ய மாட்டோம்  என்ற சர்வதிகார போக்கை விவசாயிகளுக்கு எதிராக தொடர்கிறது இந்த அரசு.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: கோட்டாட்சியரை கொலை செய்ய துணிஞ்சிட்டாங்கன்னா! ஆளுங்கட்சி ஆதரவு எந்த அளவு இருக்குன்னு பாத்துக்கங்க! அன்புமணி!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகாவில் அமைந்துள்ள கொத்தையம் என்ற கிராமத்தில் தொழிற்பேட்டை ஒன்றை அமைக்க அரசு திட்டமிடுகிறது. இதற்கு தமிழக அரசு தேர்ந்தெடுத்து இருக்கின்ற இடம் எது என்று பார்த்தால் 70 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் அரளிக்குளம். கொத்தையம் கிராமம் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பல கிராமத்து விவசாயிகளின் நீர் பாசனத்திற்கு  துணையாக நிற்கிறது அரளிக்குளம்.

தற்போது இருக்கும் அரசு திட்டங்களை  தெளிவாக தீட்டுவதை விட மிக மிக தந்திரமாக தீட்டுகிறது. 10 வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இருந்த இரண்டு அரசுகளும்  குளத்தை தூர்வாராமல் செய்துவிட்டு தற்போது இந்த குளம் எதற்கும் பயனுள்ளதாக இல்லை எனவே அந்த இடத்தை சமமாக மாற்றி தொழிற்பேட்டை அமைக்க போகிறோம் மக்களுக்கு வேலை கொடுக்கப் போகிறோம், மக்களை முன்னேற்ற போகிறோம் என்று  எண்ணற்ற அளவில் போலியான பிம்பங்களை மக்கள் மனதில் உருவாக்கி கொண்டு இருக்கிறது. சென்ற வருடம் இதே போலத்தான் அருகில் இருக்கும் மற்றொரு கிராமத்தில் தொழிற்பேட்டை அமைக்க போகிறோம் என்றது இந்த அரசாங்கம். இரண்டு மாதங்கள் பல கட்சிகளும் விவசாயிகளும் ஒன்றிணைந்து போராடி மாவட்ட ஆட்சியர் மூலம்  தொழிற்பேட்டை வருவதை தடுத்து நிறுத்தினர். 

நாடளுமன்றத் தேர்தல் வந்தது உடனே மக்களுக்கு துணையாக நிற்கும் கட்சி போல நரி வேடம் அணிந்து நாங்கள் விவசாயத்தை காப்போம் தொழிற்பேட்டை வருவதை தடுத்து நிறுத்துவோம் என்று பல போலியான வாக்குறுதிகளை மேடைக்கு மேடை தெருவுக்கு தெரு தொடர்ந்து கூச்சலிட்டு வெற்றியும் பெற்று தற்போது மீண்டும் அதே பழைய கதையான தொழிற்பேட்டை அமைப்பதில் வந்து நிற்கிறது  தந்திரமான அரசு. 

இதையும் படிங்க:  மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த புது திட்டத்தை கையில் எடுத்த பள்ளிக் கல்வித் துறை.. என்ன தெரியுமா?

விவசாய மக்களுக்கு இல்லை இல்லை  விவசாய தோழர்களுக்கு தோழனாய் இருக்கும் கட்சிகளே மக்களை ஏமாற்றுகிறது என்பது தான் வருத்தமாக இருக்கிறது. மாற்றமும் முன்னேற்றமும் மக்களுக்கு தேவை தான் அதில் எந்தவித மாற்று கருத்து இல்லை. இருந்தும் அந்த மாற்றம் முன்னேற்றம்  எந்த ஒரு உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் இருத்தல் வேண்டும் என்று  மனிதம் கொண்ட மனிதர்கள் நினைக்கிறார்கள். பாட்டாளி மக்களுக்கான கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் தனது பாடலில் அழகாக கூறியிருக்கிறார். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பார் அதேபோலத்தான் இருக்கிறது இன்றைய நிலை அரசாங்கமாய் பார்த்து திருந்தாவிட்டால் மக்களால் திருத்தப்படுவீர்கள் என திலகபாமா தெரிவித்துள்ளார். 

click me!