பஞ்சாப்பில் நடைபெற்ற கபடிப் போட்டியில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய அளவிலான கபடி போட்டி
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தேசிய அளவிலான கபடிப் போட்டிகள் பெண்கள் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம்,பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகத்தின் பெண்கள் கபடி அணியினர் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இன்று பஞ்சாபில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் இடையே கபடிப் போட்டியியானது நடைபற்றது. அப்போது போது ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதைக் கண்டித்து கேள்வி எழுப்பிய தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகமது ஷமிக்கு மீண்டும் சோதனை; டி20 தொடர் முழுவதும் விளையாடுவதில் சிக்கல்; முக்கிய அப்டேட்!
வீராங்கனைகள் மீது தாக்குதல்
அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் மோதியது. அப்போது ஃபவுல் அட்டாக் குறித்து முறையிட்ட போது தமிழக வீராங்கனை மீது நடுவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மற்ற வீராங்கனைகளுக்கு இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளது. அந்த வீடியோவில் மாணவி ஒருவர் நடுவரிடம் ஃபவுல் அட்டாக் குறித்து ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து அந்த வீராங்கனையை நடுவர் தாக்குவது போல் காட்சி உள்ளது. இதனையடுத்து மற்ற வீராங்கனைகள் நடுவரை சூழ்ந்து கொண்டு மோதலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காட்சியளிக்கப்பட்டது. நாற்காலிகள் தூக்கு வீசப்பட்டது.
மாணவிகளின் பாதுகாப்பு நிலை என்ன.?
போர்களம் போல் அந்த பகுதி காட்சியளித்த நிலையில் பல்கலைக்கழக பயிற்சியாளர் பாண்டி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக வீராங்னைகளின் பாதுகாப்பு கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் மேக்நாத் ரெட்டி, வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளதாகவும், இது தொடர்பாக அம்மாநில காவல்துறையினரிடம் பேசியுள்ளதாக தெரிவித்தார். இதனிடையே தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழகங்களிடையே கபடிப் போட்டியின் போது ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதைக் கண்டித்து கேள்வி எழுப்பிய தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். இதே போல அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உரிய விதிமுறைகளை பின்பற்றி கபடி போட்டியை நடத்த வேண்டிய நடுவர்களே விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதோடு, அதனை சுட்டிக்காட்டிய தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கோடை வெயிலுக்கு தமிழகம் தயார்.! மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஸ்கெட்ச் போட்ட செந்தில் பாலாஜி
பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும்
எனவே, பஞ்சாப் மாநில அரசை தொடர்பு கொண்டு தமிழக கபடி வீராங்கனைகளை தாக்கிய நடுவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழக கபடி பெண்கள் அணியின் பயிற்சியாளரையும், வீராங்கனைகளையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.