மக்களுக்கு 'குட் நியூஸ்' தமிழகத்தில் கொரோனா குறையுது.. இன்றைய நிலவரம் இதுதான்..

Published : Feb 11, 2022, 06:29 AM IST
மக்களுக்கு 'குட் நியூஸ்' தமிழகத்தில் கொரோனா குறையுது.. இன்றைய நிலவரம் இதுதான்..

சுருக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் ஓமிக்ரான் அலை ஏற்பட்டது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தைக் கூட கடந்தது. பின்னர் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது. கடந்த ஜனவரி  22ஆம் தேதி தினசரி வைரஸ் பாதிப்பு 30,700ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு இப்போது 3,592ஆகக் குறைந்துள்ளது. 

வரும் நாட்களில் வைரஸ் பாதிப்பு மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பிய 4 பேர் உட்பட மொத்தம் 3,592 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

தமிழகத்தில் இதுவரை 34,28,068 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தினசரி கொரோனா உயிரிழப்பும் தொடர்ந்து கட்டுக்குள்ளேயே இருந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 9 தனியார் மருத்துவமனைகளிலும் 16 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!