Pamban Bridge: புதிய பாம்பன் ரயில் பாலத்தின் பணிகள் 84% நிறைவு! இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குபாலம்

By Pothy RajFirst Published Dec 2, 2022, 1:43 PM IST
Highlights

பாம்பன் தீவையும், ராமேஸ்வரத்தையும் இணைக்கும் புதிய பாம்பன் ரயில் பாலத்தின் பணிகள் ஏறக்குறைய 84 சதவீதம் முடிந்துவிட்டன. இதற்கான புகைப்படங்களை ரயில்வே வெளியிட்டுள்ளது.

பாம்பன் தீவையும், ராமேஸ்வரத்தையும் இணைக்கும் புதிய பாம்பன் ரயில் பாலத்தின் பணிகள் ஏறக்குறைய 84 சதவீதம் முடிந்துவிட்டன. இதற்கான புகைப்படங்களை ரயில்வே வெளியிட்டுள்ளது.

ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தில் ஏராளமான விரிசல்கள் விழுந்ததையடுத்து, அதற்குப் பதிலாக புதிய பாலம் கட்ட கடந்த 2018ம் ஆண்டு மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. இந்தத் திட்டத்துக்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு ரயில்பாலப் பணிகளை பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல்நாட்டினார்.

50 கி.மீ பேரணி!16 தொகுதிகள்: மெகாபேரணியில் பிரதமர் மோடி பிரச்சாரம்:10 லட்சம் பேர் திரண்டனர்

இதைத் தொடர்ந்து 2019, ஆகஸ்ட்11ம் தேதி பூமிபூஜையுன் புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. கடலுக்குள் 101 தூண்கள் அமைக்கப்பட உள்ளன, ஒட்டுமொத்த பாலத்தின் நீளம் 2,078 மீட்டராகும். இந்த பாலத்தை கட்டுவிக்க இரும்பு மிதவைகளில், கிரேன்கள், பாறைஉடைக்கும் எந்திரங்கள், சிமெண்ட் கலவை எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன

சிபிஐ, அமலாக்கப்பிரிவு மூலம் தேர்தலில் மோடியால் வெல்ல முடியாது:டிஆர்எஸ் கவிதா விளாசல்

 

India’s 1st Vertical lift Railway Sea Bridge
🔹84% work completed & track laying work is in progress
🔹Fabrication of Vertical Lift Span girder is nearing completion.
🔹Assembling platform for vertical lift span on Rameswaram end of the bridge is getting ready. pic.twitter.com/0Ze5C7PwBA

— Ministry of Railways (@RailMinIndia)

கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்திலும், ஒவ்வொரு தூண்களுக்கு இடையேயும் இணைப்புக்காக 99 கார்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெரிய கப்பல்கள் செல்லும் போது, பாலம் தானாக செங்குத்தாக தூக்கும் வகையில் ராட்சத லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சகம், பாம்பன் ரயில்பாலத்தின் பணிகள் 84 சதவீதம் முடிந்துவிட்டதாகத் தெரிவித்து ட்விட்டரில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் செங்குத்துதூக்குபாலத்தின் பணிகள் ஏறக்குறைய நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்தப் பணிகள் முடிந்ததும் பாலம் தயாராகிவிடும் எனத் தெரிவித்துள்ளது.

பாம்பன் ரயில் பாலம் குறித்த 5 முக்கிய தகவல்கள்

1.    இந்தியாவிலேயே கடலுக்குள் கட்டப்பட்டமுதல் ரயில்வே பாலம் பாம்பன் ரயில்வே பாலம். இது கடந்த 1914ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.

2.    இந்த பாலத்தின் நீளம் 2,078 மீட்டர், திட்டச் செலவு ரூ.279.63 கோடியாகும்.

3.    ரயில்விகாஸ் நிகம் தரப்பில் கூறுகையில் “ 2020, பிப்ரவரியில்பணி தொடங்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டது. இந்த பாலத்தின் சிறப்பு அம்சம் 72 மீட்டர் நீளமுள்ள செங்குத்து தூக்குபாலம், 17மீட்டர் உயரத்துக்கு பாலம் தூக்கப்பட்டு கப்பல் செல்ல வழிவிடும்

4.    தற்போதுள்ள பாலத்தில் ஹெர்சர் ரோலிட் லிப்ட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது, பக்கவாட்டில் பாலம் திறக்கும். ஆனால், புதிய பாலம் செங்குத்தாக மேலே உயர்ந்து பாலத்தை திறக்கும். 

5.    இந்த பாலம் கட்டப்பட்டபின், ரயில்கள் வேகமாகச் செல்லலாம், அதிகமான பாரங்கள் ஏற்றிச் செல்லலாம்.

click me!